
இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு சாதகமான சூழலையும் ஸ்திரத்தன்மையையும் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு வாழ்த்துச் செய்தியொன்றை விடுத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சவால்களை எதிர்கொள்வதற்கான தேசிய மூலோபாயத்தை தயாரிப்பதில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி காட்டும் அக்கறையை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.