Home » சட்டம் & அரசியல் » பொருளாதார நெருக்கடியிலிருந்து சிறிலங்கா மீள்வதற்கு வெளிநாட்டுத் தூதுவர்கள் ஆதரவு வழங்குவதாக உறுதி

பொருளாதார நெருக்கடியிலிருந்து சிறிலங்கா மீள்வதற்கு வெளிநாட்டுத் தூதுவர்கள் ஆதரவு வழங்குவதாக உறுதி

23 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் , பாரிஸ் கிளப்பின் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் அல்லாதவர்கள் மன்றத்தில் பங்கேற்றனர்.

👤 Sivasankaran23 Sep 2022 10:37 AM GMT
பொருளாதார நெருக்கடியிலிருந்து சிறிலங்கா மீள்வதற்கு வெளிநாட்டுத் தூதுவர்கள் ஆதரவு வழங்குவதாக உறுதி
Share Post

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியைப் பெறுவதற்கு தமது ஆதரவை வழங்குவதாக வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளனர்.

22) பிற்பகல் ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கடன் மறுசீரமைப்பு மற்றும் பன்னாட்டு நாணய நிதியத்தின் திட்டத்திற்கான தூதுவர்கள் மன்றத்தில் அவர்கள் இந்த உறுதிமொழியை வழங்கினர் .

23 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் , பாரிஸ் கிளப்பின் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் அல்லாதவர்கள் மன்றத்தில் பங்கேற்றனர்.

இந்த நிலையில் இருந்து சிறிலங்கா மீள முடியும் என வெளிநாட்டு தூதுவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.