Home » சட்டம் & அரசியல் » இ-டெண்டர் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது போபால் மாவட்ட நீதிமன்றம்

இ-டெண்டர் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது போபால் மாவட்ட நீதிமன்றம்

குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் நிரூபிக்க தவறியதால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்ததாக, வழக்கறிஞர் பிரசாந்த் ஹர்னே கூறினார்.

👤 Sivasankaran25 Nov 2022 8:37 AM GMT
இ-டெண்டர் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது போபால் மாவட்ட நீதிமன்றம்
Share Post

பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வரும் இ-டெண்டர் மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து போபால் மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

சிறப்பு நீதிபதி சந்தீப் குமார் ஸ்ரீவஸ்தவா அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் நிரூபிக்க தவறியதால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்ததாக, வழக்கறிஞர் பிரசாந்த் ஹர்னே கூறினார்.

இ-டெண்டரில் முறைகேடு நடந்ததைக் கண்டு, 2018 ஆம் ஆண்டில் , அப்போதைய மத்தியப்பிரதேச மாநில எலக்ட்ரானிக்ஸ் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் அதிகாரி மணீஷ் ரஸ்தோகி, இ-டெண்டர் மோசடியை அம்பலப்படுத்தினார்.