Home » சட்டம் & அரசியல் » கட்சியை விட்டு விலக மாட்டோம்: நிமல் சிறிபால

கட்சியை விட்டு விலக மாட்டோம்: நிமல் சிறிபால

கட்சியை விட்டு விலகப் போவதில்லை என துறைமுகங்கள், விமான போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

👤 Sivasankaran25 Nov 2022 9:01 AM GMT
கட்சியை விட்டு விலக மாட்டோம்: நிமல் சிறிபால
Share Post

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 9 உறுப்பினர்களின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்ததையடுத்து, அவர்களை அடித்தாலும், விரட்டியடித்தாலும் கட்சியை விட்டு விலகப் போவதில்லை என துறைமுகங்கள், விமான போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்ட சில சந்தர்ப்பவாதிகளும், தமது சொந்த நலனுக்காக விலகியவர்களும் தற்போது அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்வதற்காக எம்மைக் குற்றம் சுமத்துகின்றனர் என நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார் .

எங்களை அடித்து விரட்டினாலும் கட்சியை விட்டு போக மாட்டோம் என்றார்.