Home » சட்டம் & அரசியல் » ஜனாதிபதி விக்கிரமசிங்க புதிய ஆணையை பெற வேண்டும்: சன்ன ஜயசுமண

ஜனாதிபதி விக்கிரமசிங்க புதிய ஆணையை பெற வேண்டும்: சன்ன ஜயசுமண

புதிய கொள்கைத் தீர்மானங்களை எடுக்க வேண்டுமாயின் புதிய ஆணையைப் பெற வேண்டும் எனப் பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

👤 Sivasankaran25 Nov 2022 9:05 AM GMT
ஜனாதிபதி விக்கிரமசிங்க புதிய ஆணையை பெற வேண்டும்: சன்ன ஜயசுமண
Share Post

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு அல்லது வேறு ஏதேனும் விடயங்கள் தொடர்பில் புதிய கொள்கைத் தீர்மானங்களை எடுக்க வேண்டுமாயின் புதிய ஆணையைப் பெற வேண்டும் எனப் பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஜயசுமண, ஜனாதிபதி ஒருவர் பதவி விலகியதன் பின்னர் எஞ்சிய காலப்பகுதிக்கு சபையினால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் நான்கரை வருடங்களின் பின்னர் தேர்தலுக்கு செல்ல முடியுமா என்பது தெளிவாக தெரியவில்லை. இதற்கு தீர்வு காண நீதித்துறையிடம் கருத்து கேட்க வேண்டும்,'' என்றார்.

1994 , 2004 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தோற்கடிக்கப்பட்டுள்ளார். எனவே அவரது கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஆணை அவருக்கு இல்லை என்று அவர் கூறினார். அதன்படி தற்போதைய ஜனாதிபதி புதிய ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.