Home » சட்டம் & அரசியல் » சிறிலங்காவுக்கு பன்னாட்டு நாணய நிதியத்தின் உதவி விரைவில் கிடைக்கும் – அமெரிக்க தூதுவர்
சிறிலங்காவுக்கு பன்னாட்டு நாணய நிதியத்தின் உதவி விரைவில் கிடைக்கும் – அமெரிக்க தூதுவர்
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை சந்தித்த போதே அமெரிக்க இராஜதந்திரி இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
👤 Sivasankaran1 Feb 2023 3:30 PM GMT

பன்னாட்டு நாணய நிதியத்தின் (IMF) சிறிலங்காவுக்கான உதவிகள் அனைத்து நாடுகளின் ஒத்துழைப்புடன் துரிதப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் உறுதியளித்துள்ளார்.
நேற்று (ஜனவரி 31) நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை சந்தித்த போதே அமெரிக்க இராஜதந்திரி இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
இதன்படி, சிறிலங்கா அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் வெளிநாடுகள் தமது நம்பகத்தன்மையை மேலும் உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சுங் கூறியதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire