வசந்த முதலிகே மேலும் மூன்று வழக்குகளில் விடுதலை
கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியின் பின்னர் ஆகஸ்ட் 18 இல் கைது செய்யப்பட்டு 150 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
👤 Sivasankaran2 Feb 2023 2:09 PM GMT

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மேலும் மூன்று வழக்குகள் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் திலான கமகேவினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளரான முதலிகே, கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியின் பின்னர் ஆகஸ்ட் 18 இல் கைது செய்யப்பட்டு 150 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
எதிர்க் கட்சிகள், பொதுச் சமூக ஆர்வலர்கள் மற்றும் பன்னாட்டு மன்னிப்புச் சபை போன்ற சர்வதேச அமைப்புகள், பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் முதலிகேவின் விடுதலைக்கு அழைப்பு விடுத்துள்ளன.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire