Home » சட்டம் & அரசியல் » கோட்காபுரா துப்பாக்கிச் சூடு: பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங்குக்கு முன்பிணை வழங்கப்பட்டது

கோட்காபுரா துப்பாக்கிச் சூடு: பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங்குக்கு முன்பிணை வழங்கப்பட்டது

மார்ச் 23 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தந்தை-மகன் இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

👤 Sivasankaran18 March 2023 10:44 AM GMT
கோட்காபுரா துப்பாக்கிச் சூடு: பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங்குக்கு முன்பிணை வழங்கப்பட்டது
Share Post

2015ஆம் ஆண்டு கோட்கபுரா துப்பாக்கிச் சூடு வழக்கில் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலுக்கு பஞ்சாப் மாநிலம் ஃபரித்கோட் நீதிமன்றம் புதன்கிழமை முன்பிணை வழங்கியது. இருப்பினும், சிங்கின் மகனும் முன்னாள் துணை முதல்வருமான சுக்பீர் சிங் பாதலின் முன்பிணை மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சுக்பீர் சிங்கின் வழக்கறிஞர், மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாகக் கூறினார். மார்ச் 23 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தந்தை-மகன் இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

பிரகாஷ் சிங் பாதல் பஞ்சாபின் முதல்வராகவும், அவரது மகன் மாநில உள்துறை அமைச்சராகவும் இருந்தபோது, அக்டோபர் 14, 2015 அன்று போராட்டக்காரர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். பெஹ்பால் கலனில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர், கோட்காபுராவில் சிலர் காயமடைந்தனர்.