தேசபந்து தென்னகோன் அடுத்த பொலிஸ் மா அதிபர் ஆகிறார்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தென்னகோனை நியமிப்பதற்கு ஜனாதிபதி அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
👤 Sivasankaran18 March 2023 11:16 AM GMT

தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன ஓய்வு பெற்றதை அடுத்து மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவார் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா காவல்துறையின் 36ஆவது பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தென்னகோனை நியமிப்பதற்கு ஜனாதிபதி அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்ன எதிர்வரும் மார்ச் மாதம் 25ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire