Home » சட்டம் & அரசியல் » இலங்கைக்கு கைதிகளுக்கு ஆதரவு

இலங்கைக்கு கைதிகளுக்கு ஆதரவு

வடக்கில் இலங்கைக்கு கைதிகளுக்கு ஆதரவாக கடையடைப்பு

👤 Mangatha21 Oct 2017 9:11 AM GMT
இலங்கைக்கு கைதிகளுக்கு ஆதரவு
Share Post

தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் விடு­த­லையை வலி­யு­றுத்தி (20-10-2017) வெள்­ளிக்­கி­ழமை வட­மா­கா­ணம் முழு­வ­தும் முழு அடைப்­புப் போராட்­டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. பொது அமைப்­புக்­கள், அர­சி­யல் கட்­சி­கள் இணைந்து கூட்­டாக இந்த அடைப்­புக்கு அழைப்பு விடுத்­துள்­ளன.
அன்­றைய தினம் காலை 9.30 மணிக்கு வடக்கு மாகாண ஆளு­நர் செய­ல­கத்­தின் முன்­னால் கவ­ன­ ஈர்ப்­புப் போராட்­ட­மும் நடத்­தப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. போராட்­டம் தொடர்­பில் 19 அமைப்­புக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் ஒப்­ப­மிட்டு ஊடக அறிக்கை ஒன்றை விடுத்­துள்­ளன.
தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் விடு­விப்பு சட்­ட ­ரீ­தி­யான விட­யம் என்­ப­தைக் கடந்­து ­விட்­டது. நியா­யத்­தின் அடிப்­ப­டை­யில் அணு­கப்­பட வேண்­டிய ஓர் விட­ய­மாக ஆகி­விட்­டது.
ஓர் அர­சி­யல் தீர்­மா­னத்­தின் ஊடா­கத் தீர்க்­கப்­ப­ட­வேண்­டிய அடிப்­ப­டை­யான பிரச்­சி­னை­க­ளுள் ஒன்று என்ற பரி­மா­ணத்­தை­யும் அடைந்­து­விட்­டது.
12 ஆயி­ரம் முன்­னாள் விடு­த­லைப் புலி­களை, குறு­கி­ய­கா­லத் தடுப்புக்குப் பிறகு, மீள­வும் சமூ­கத்­து­டன் இணைய வழி­வகை செய்த ஓர் அரச பொறி­மு­றை­யா­னது, வெறும் 132 பேர்­களை மட்­டும் தொடர்ந்­தும் சிறை­க­ளில் அடைத்­தி­ருப்­ப­தா­னது எவ்­வித சட்ட அர்த்­த­மும் இல்­லாத செயற்­பாடு.
எமது வாக்­கு­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட நாடா­ளு­மன்­றப் பிர­தி­நி­தி­கள், அர­சின் பங்­கா­ளி­க­ளா­க­ மாறி, அனைத்து விட­யங்­க­ளி­லும் அர­சுக்கு உறு­து­ணை­யாக இருக்­கின்­றார்­கள்.
நாடா­ளு­மன்­றச் செயற்­பா­டு­கள் அனைத்­தி­லும் அரசை நியா­யப்­ப­டுத்தி ஆத­ரிக்­கின்­றார்­கள்.
ஆத­ர­வுக்­கான பிர­தி­யீ­டா­கத்­தன்­னும் – உறு­தி­யான வார்த்­தை­க­ளால் பேசி – சிறை­க­ளில் வாடும் தமிழ் அர­சி­யல் கைதி­களை விடு­விக்க அவர்­க­ளால் முடி­யும்.
உற­வு­கள் சிறை­க­ளில் வாடி­னா­லும் பர­வா­யில்லை, தாம் அர­சைச் சங்­க­டப்­ப­டுத்­தக்­கூ­டாது என்­ப­தற்­கா­க­வும், அர­சு­ட­னான தமது உற­வு­கள் பாதிப்­பு­றக் கூடாது என்­ப­தற்­கா­க­வும், மென்­மை­யா­கப் பேசி எமது பிர­தி­நி­தி­கள் காலத்­தைக் கடத்தி வரு­கின்­றார்­கள்.
தமது வழக்­கு­களை மீண்­டும் தமிழ்ப் பகுதி நீதி­மன்­றங்­க­ளுக்கு மாற்­ற ­வேண்­டும் என்ற உட­ன­டிக் கோரிக்­கை­யை­யும், அவ்­வாறு மாற்­றப்­பட்­ட­தன் பின்பு, தமது வழக்­கு­க­ளைத் துரி­த­மாக விசா­ரித்து முடிவு காண­ வேண்­டும்.
அநு­ரா­த­பு­ரம் சிறை­யில் கால­வ­ரை­ய­றை­யற்ற பட்டினிப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டி­ருக்­கும் தமிழ் அர­சி­யல் கைதி­கள் மூவ­ரின் கோரிக்­கை­களை இழுத்­த­டிப்­பின்றி உட­ன­டி­யாக நிறை­வேற்ற வேண்டும்.
முழுத் தமிழ் அர­சி­யற் கைதி­க­ளை­யும் ஓர் அர­சி­யற் தீர்­மா­னத்­தி­னூ­டாக விடு­விக்­கு­மாறு அரசை வலி­யு­றுத்­தி­யும், அச­மந்­தப் போக்­கைக் கைவிட்­டும் – மழுப்­பல் பதில்­களை வழங்­கா­ம­லும் – அனைத்து தமிழ் அர­சி­யல் கைதி­க­ளை­யும் விடு­விப்­ப­தற்­கான நேரடி அழுத்­தத்­தினை அர­சுக்கு வழங்­கு­மாறு எமது நாடா­ளு­மன்­றப் பிர­தி­நி­தி­களை வற்­பு­றுத்­தி­யும் வடக்கில் முழுமையான அடைப்பை நடத்தவுள்ளோம்.
சனிக்­கி­ழமை, யாழ்ப்­பா­ணம் வரு­கை­த­ர­வி­ருக்­கும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு, தாம­த­மற்­ற­தீர்வு காண­வேண்­டிய இந்த விவ­கா­ரத்­தின் தீவி­ரத் தன்­மையை உணர்த்­து­வ­தற்­கு­மாக, வெள்­ளிக்­கி­ழமை வடக்கு மாகா­ணம் முழு­வ­தும் முழு அடைப்­புப் போராட்­டத்தை மேற்­கொள்ள தமிழ் மக்­களை உரி­மை­யு­டன் அழைக்­கின்­றோம்.
அவ­சர மருத்­துவ சேவை­கள் தவிர்ந்த ஏனைய அனைத்­துச் செயற்­பா­டு­க­ளை­யும் முழு­ம­ன­தோடு நிறுத்தி – நியா­யத்­தோ­டும் சாவோ­டும் போரா­டு­கின்ற தமிழ் அர­சி­யற் கைதி­க­ளுக்கு எமது ஆத்­ம­ப­லத்­தைக் கொடுப்­போம்.
தமிழ் அர­சி­யற் கைதி­க­ளுக்கு நிரந்­தர விடு­தலை கிடைக்­கும்­வரை நாம் ஓய­மாட்­டோம் என்ற செய்­தியை – இந்த நாட்­டின் அர­சுக்­கும், எமது நாடா­ளு­மன்­றப் பிர­தி­நி­தி­க­ளுக்­கும், இதன் பொறுப்­பு­டைய ஒவ்­வொரு தரப்­புக்­கும் உறு­தி­யா­கத் தெரி­விக்க வெள்­ளிக்­கி­ழமை காலை 9.30 மணிக்கு, வடக்கு மாகாண ஆளு­நர் செய­ல­கம் முன்­பாக அணி திரள்­வோம் -­என்­றுள்­ளது.
தமிழ் மக்­கள் பேரவை, யாழ்ப்­பாண பல்­க­லைக் கழக ஆசி­ரி­யர் சங்­கம், இலங்கை ஆசி­ரி­யர் சங்­கம், அர­சி­யல் கைதி­களை விடு­தலை செய்­வ­தற்­கான தேசிய அமைப்பு, வட­மா­காண புதிய அதி­பர் சங்­கம், யாழ்ப்­பாண பல்­க­லைக்­கழ ஊழி­யர் சங்­கம், சமூக விஞ்­ஞான ஆய்வு மையம், கிராமி உழைப்­பா­ளர் சங்­கம், சமூக நீதிக்­கான வெகு­சன அமைப்பு, தமிழ் மக்­கள் வாழ்­வு­ரி­மைக்­கான செயற்­பாட்டு மையம், வலி. வடக்கு மீள்­கு­டி­யேற்ற மற்­றும் புனர்­வாழ்­வுக் குழு, யாழ்ப்­பாண பொரு­ளி­ய­லா­ளர் சங்­கம், தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, ஈழ­மக்­கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி, புதிய சன­நா­யக மாக்­சிச லெனி­னி­சக் கட்சி, சன­நா­யக மக்­கள் விடு­தலை முன்­னணி, தமிழ் சிவில் சமூக அமை­யம், தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி, அகில இலங்கை சைவ மகா சபை ஆகிய 19 அமைப்­புக்­க­ளுமே முழு அடைப்­புப் போராட்­ட­துக்­கான அழைப்பை விடுத்­துள்­ளன.

Tags