Home » சட்டம் & அரசியல் » அன்பின் அடையாளத்தை அழிக்க நினைக்கும் இந்துத்துவா அமைப்புக்கள் தாஜ்மகால் தேஜ்மந்திர்(தேஜ்கோவிலாக) மாற்றப்படுமாம்

அன்பின் அடையாளத்தை அழிக்க நினைக்கும் இந்துத்துவா அமைப்புக்கள் தாஜ்மகால் தேஜ்மந்திர்(தேஜ்கோவிலாக) மாற்றப்படுமாம்

காதல் சின்னமாக விளங்கும் தாஜ்மகால் விரைவில் தேஜ்மந்திர் என்ற கோவிலாக மாற்றுவோம் என்று மதவெறிப் பேச்சை பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பேசியுள்ளார். இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது,

👤 Saravana Rajendran6 Feb 2018 3:59 AM GMT
அன்பின் அடையாளத்தை அழிக்க நினைக்கும் இந்துத்துவா அமைப்புக்கள்   தாஜ்மகால் தேஜ்மந்திர்(தேஜ்கோவிலாக) மாற்றப்படுமாம்
Share Post

வரலாற்றில் முதல் முறையாக ஆக்ராவில், 10 நாட்கள் நீண்ட தாஜ் மகாஉத்சவம் நடத்தப்படுகிறது. இதில் முகலாய கால கலை, கலாச்சார வழக்கான நிகழ்ச்சிகளுக்குப் பதிலாக ராமாயணத்தின் அடிப்படையில் ராம் லீலாவில் நடன நாடகத்துடன் தொடங்கப்படுகிறது.
இதன் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக உத்திரப்பிரதேச மாநில முதல்வர் சாமியார் ஆதித்யநாத், ஆளுநர் ராம் நாய்க் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதற்கு பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தாஜ் மகாலில் விழா நடத்துவது உள்நோக்கம் கொண்டது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் வினய் கட்டியார் கூறும் போது தாஜ் மகால் விரைவில் தேஜ் மந்தீர் ஆகும் என கூறி உள்ளார். தாஜ் உத்சவம் அல்லது தேஜோ உத்சவம் என்று இரண்டும் ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார். தாஜ் மற்றும் தேஜ் இரண்டுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை என்ற அவர் எங்கள் தேஜ மந்திர் அவுரங்கசீப்பின் சமாதியாக மாற்றப்பட்டு உள்ளது. தாஜ் மகால் தேஜ் மந்திராக விரைவில் மாற்றப்படும் என தெரிவித்துள்ளார்.
உலக காதலர்களின் சின்னமாக தாஜ்மகால் விளங்குகிறது, சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த தாஜ்மகாலை எதிரி நாட்டு மன்னர்கள் கூட அதன் மீது கைவைக்க மனமில்லாமல் அதன் அழகை ரசித்துவிட்டுசென்றுள்ளனர். இந்த நிலையில் இந்தியாவை ஆளும் இந்துத்துவ சிந்தனை கொண்ட பாஜக அரசு எந்த ஒரு மத அடையாளமும் இல்லாமல் அழியாக்காதல் அடையாளமாக உள்ள தாஜ்மகாலை ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடையாளமாக மாற்றும் முயற்சியில் முனைப்புடன் இருந்துவருகிறது,

Tags