Home » சட்டம் & அரசியல் » தமிழக சட்ட முன்வடிவை நிறுத்திவைக்கும் அதிகாரம் டில்லிக்கு கிடையாது.

தமிழக சட்ட முன்வடிவை நிறுத்திவைக்கும் அதிகாரம் டில்லிக்கு கிடையாது.

தமிழக சட்டமுன்வடிவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் குடியரசுத்தலைவருக்கோ, மத்திய அரசுக்கோ கிடையாது "நீட்" தேர்வு-மாநிலங்களவையில் ஏ. நவநீதிகிருஷ்ணன் பேச்சு

👤 Saravana Rajendran7 Feb 2018 9:31 AM GMT
தமிழக சட்ட முன்வடிவை நிறுத்திவைக்கும் அதிகாரம் டில்லிக்கு கிடையாது.
Share Post

"நீட்" தேர்வு தொடர்பாக தமிழ்நாடுசட்டமன்றம் நிறைவேற்றிய சட்டமுன் வடிவை ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைக்கும் அதிகாரம் அரசமைப்புச்சட்டத்தின்கீழ் குடியரசுத்தலைவருக்கோ, மத்திய அரசுக்கோ கிடையாது என்றும்,உடனடியாக ஒப்புதல் அளித்து தமிழகத்து மாணவர்களை, குறிப்பாக கிராமப்புற ஏழை மாணவர்களைக் காப்பாற்றிட, முன்வரவேண்டும் என்றும் குடியரசுத் தலைவரையும், மத்திய அரசையும் அஇஅதிமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் ஏ. நவநீதிகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை மாலை மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தில் கலந்துகொண்டு, ஏ. நவநீதிகிருஷ்ணன் பேசியதாவது: தமிழ் நாட்டில் மாணவர்கள் தற்போது பிளஸ் 2 தேர்வுக்குத்தங்களைத் தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். அதே சமயத்தில் அவர்கள் நீட் தேர்வு குறித்தும் மிகவும் சங்கடத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது, சட்டத்தின்படி, நீட் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் மிகவும் சிறப்பானமுறையிலும், அறிவுக்கூர்மையுடனும் ஒரு காரியம் செய்திருக்கிறார். அதாவது நீட் தேர்விற்கு விலக்களிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய சட்டமுன்வடிவின் நிலை என்ன என்று தெரிந்துகொள்வதற்காக குடியரசுத் தலைவரின் அலுவலகத்திற்குக் கடிதம்எழுதியிருக்கிறார்.

ந்தக் கடிதத்திற்குகுடியரசுத் தலைவரின் அலுவலகத்திலிருந்து அவருக்குப் பதில் வந்திருக்கிறது. குடியரசுத் தலைவர் அலுவலகம் அந்தச் சட்டமுன்வடிவை இதுவரை பெறவில்லை என்று பதில் அனுப்பியிருக்கிறது.இதுதொடர்பாக மத்திய அரசின் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். ஏனெனில் இது மத்தியஅரசின் அதிகாரவரம்பெல்லைக் குட்பட்ட விவகாரம் என்பதாலும், குடியரசுத் தலைவரின் அரங்கம் சம்பந் தப்பட்ட பிரச்சனை என்பதாலும் இதனை எழுப்புகிறேன்.அரசமைப்புச்சட்டத்தின் 52, 53,73,74 மற்றும் அதன் விலக்கக்கூறுகள் அனைத்தையும் படித்துப் பாருங்கள்.அவற்றில் மிகவும் தெளிவாக இருக்கிறது. தமிழ்நாட்டு மாணவர்களின் மனஉளைச்சலை மத்திய அரசாங்கம் குறித்துக்கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். குடியரசுத் தலைவர்அலுவலகத்திலிருந்து, டி.கே.ரங்கராஜனுக்குத் தங்கள் அலுவலகத்திற்கு அந்தச் சட்டமுன்வடிவு வரவில்லை என்று பதில் சென்றிருப்பதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. மக்களின் விருப்பத்திற்கேற்ப தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய சட்டமுன்வடிவு மத்திய அரசிடமிருந்து குடியரசுத்தலைவர் அலுவலகத்திற்கு இன்னமும் அனுப்பிவைக்கப் படவில்லை என்பது தெளிவாகிறது.கல்வி தொடர்பான சட்டம் நிறைவேற்றுவதற்கு தமிழ்நாடுசட்டமன்றத் திற்கு இருக்கக்கூடிய பொதுப்பட்டியலின் கீழான அதிகாரத்தின் கீழ்தான்இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கல்வி தற்போதுபொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதால், இது தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டிருந்தபோதிலும், அதற்கான அதிகாரவரம்பெல்லை அதற்கு உண்டு என்றபோதிலும், இதுஇந்திய நாடாளுமன்றத்தாலும், அதாவது இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத்தின் 10(உ) ஆவது பிரிவின்கீழும் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இத்தகைய இசைவின்மையைச் சரிசெய்வதற்காக, அரசமைப்புச்சட்டத் தில் ஒரு ஷரத்து இருக்கிறது. இது மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் மத்திய அரசுக்குத் தெரியும்.மத்திய அரசாங்கம் அதனை ஆராயவேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் இளம் மாணவர்களைப் பாதுகாப்பதற்காக மத்திய அரசு இதனைச் செய்திட வேண்டும் சென்ற ஆண்டு மிகவும் அறிவுக்கூர்மையுடைய ஒரு மாணவி இந்தப்பிரச்சனையின்காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார். அது உலகத்தின் கவனத்தைக் கவர்ந்தது. ஏனெனில் அவர் பள்ளிக் கல்வியில் மிக அதிகமதிப்பெண் பெற்றிருந்தார். ஆனால்நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்திடவில்லை. இவ்வாறு இது ஒரு மிகவும் வருந்தத்தக்க பிரச்சனையாகும்.
ளம் மாணவர்களின் எதிர்காலம் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் செயலற்ற தன்மையும்,அதன்காரணமாக குடியரசுத் தலைவரின் செயலற்ற தன்மையுமே இதற்குக் காரணம் எனத் தோன்றுகிறது. இதுஅரசமைப்புச்சட்டத்தை மீறும் செயலாகும். எப்படி? எப்படியென்றால், குடியரசுத் தலைவர் என்பவர் மத்திய அரசின் நிர்வாக அதிகாரங்களுக்குத் தலைவர். எனவே, அவர் மத்திய அரசின் நிர்வாக அதிகாரங்களைச் செயல்படுத்துகிறார்.அரசமைப்புச்சட்டத்தின் 74ஆவதுபிரிவின்படியும், மத்திய அமைச்சரவையின் அறிவுரை மற்றும் உதவியுடன் மத்திய அரசாங்கத்தின் நிர்வாக அதிகாரங்கள் அவரிடம் வருகின்றன. ஆனால் இந்தப் பிரச்சனை தமிழ்நாடுசட்டமன்றம் நிறைவேற்றிய சட்டம்குறித்ததானதாகும்.

து பொதுப்பட்டியலில் வரக்கூடிய பிரச்சனையாகும். எனவே, சட்டமன்ற நடைமுறைவிதிகள் பிழையாகிவிடக் கூடாது. இது நாட்டின்சட்டவரம்புகளுக்கு உட்பட்டு மிகவும் சரியானமுறையில் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இப்போது, அரசமைப்புச்சட்டத் தின் 254 ஆவதுபிரிவின் உட்கூறு (2)இன்படி, "ஒரு மாநில சட்டமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு, அந்தப்பிரச்சனையானது பொதுப்பட்டியலுக்கு வரக்கூடிய ஒன்று என்றால், அவ்வாறு நிறைவேற்றப்பட்ட சட்டமானது, குடியரசுத்தலைவரின் பரிசீலனைக்காக ஒதுக்கப்பட்டிருக்குமானால், மாநிலத்தில் உள்ள நிலைப்படி,அவருடைய ஒப்புதலைப் பெற்றிருக்கிறது," என்பதாகும்.
மேலும் இது தொடர்பாக, மத்திய அரசின் கவனத்திற்கு உட்கூறு (2)இன்கீழ் உள்ள விலக்கக்கூறில் கூறப்பட்டுள்ள வாசகங்களையும் கொண்டுவர விரும்புகிறேன். "மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தைச் சேர்த்துக் கொள்ளவோ, திருத்தவோ அல்லது மாற்றவோ, நாடாளுமன்றத்திற்குத் தடை எதுவும் இல்லை.எனவே, அரசமைப்புச்சட்டத்தின் 254ஆவதுபிரிவின்கீழ் குடியரசுத் தலைவருக்குள்ள அதிகாரம், பிரதமரால் தலைமை தாங்கப்படும் மத்தியஅமைச்சரவையின் அறிவுரைக்குக் கீழ் வரவில்லை . குடியரசுத் தலைவருக்கு இருக்கும் சுயேச்சையான மற்றும் சுதந்திரமான அதிகாரமாகும். ஏனெனில், தமிழ்நாடுஅரசாங்கம் நிறைவேற்றிய சட்டத்தை மத்திய அரசாங்கம் கையாண்டிட முடியாது. இது மிகவும் தெளிவாக இருக்கிறது. மத்திய அரசாங்கத்தின் அதிகாரம் நிர்வாகம் செய்வது மட்டும்தான். அதுஒன்றும் நீதிக்கு உட்பட்ட ஒன்றோஅல்லது நாடாளுமன்ற/சட்டமன்றநடவடிக்கைகளுக்கு உட்பட்ட ஒன்றோ அல்ல.மேலும், தமிழ்நாடுசட்டமன்றத்தின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் எடுத்துக்கொள்ளமுடியாது. எனவே, அரசமைப்புச் சட்டத்தின் அம்சங்கள் அனைத்தையும் நான் புரிந்துகொண்டிருப்பதன்படி, குடியரசுத் தலைவர் இதில் கூறுவதற்கு ஒன்றுமில்லை.ஒரு சட்டமுன்வடிவு அவரிடம் ஒப்புதலுக்காக வரும்பட்சத்தில், அவர் அதற்கு ஒப்புதல் அளித்திட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்திடாமல், தமிழ்நாடு சட்டமன்றத்தின் அதிகாரம் இப்போது ஓரங்கட்டப்பட்டிருக்கிறது மற்றும் உதாசீனப்படுத்தப் பட்டிருக்கிறது. இவ்வாறு குடியரசுத் தலைவர் அதற்கு ஒப்புதல் அளிப்பதற்காக மத்திய அரசு அவருக்கு அனுப்பாததன்மூலம், மத்திய அரசுநாடாளுமன்றத்தையும் ஓரங்கட்டியிருக்கிறது.

மாநில அதிகாரம் பறிப்பு
பொதுப்பட்டியல் என்பது ஏதோவெறும் ஒரு தாள் அல்ல. சட்டமன்றத் தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தை, மத்திய அரசின்கீழ் செயலாற்றும் செயலாளர்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்துக்கொள்ள முடியாது. இவ்வாறுநிறுத்திவைத்திருப்பதன் மூலம் பொதுப்பட்டியல் என்பதையே நீக்கி இருக்கிறீர்கள். இவ்வாறு நீக்கி இருப்பதன்மூலம், மாநில அரசாங்கத்தின் அதிகாரங்களையே பறித்துக் கொண்டிருக்கிறீர்கள். இது ஓர் ஆழமான விஷயமாகும். நீங்கள் அரசமைப்புச்சட் டத்தின் அடிப்படை அம்சங்களையே மீறிக் கொண்டிருக்கிறீர்கள்.ஒரு சட்டமன்றம் அல்லது மத்திய அரசாங்கம் நிறைவேற்றிய சட்டத்தை நீதிமன்றங்கள்கூட தீர்மானித்திட முடியாது.நீட் தேர்வுகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு சட்டமன்றம் ஒரு சட்டத்தைநிறைவேற்றி இருக்கிறது. இது மத்தியசட்டத்திற்கு ஒவ்வாத ஒன்று என்று மத்திய அரசு கருதுமானால், (அவ்வாறு ஒவ்வாதிருப்பதும் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது) அதனை நிறுத்திவைத்திடாது, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்திட வேண்டும்.

குடியரசுத் தலைவரும் ஒப்புதலை அளித்திட வேண்டும்.அதன்பின்னர்தான் மத்திய அரசு அதன்மீது ஏதேனும் திருத்தங்கள் கொண்டுவர விரும்பினால் செய்திட முடியும்.இதுதான் நாடு சுதந்திரம் பெற்றகாலத்திலிருந்துபின்பற்றப்பட்டுவரும்நடைமுறையாகும். இப்போதும்கூட மத்தியஅரசு அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிட முடியும், அனுப்பிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஏ. நவநீதகிருஷ்ணன் கோரியுள்ளார்.
நன்றி தீக்கதிர் நாளிதழ்

Tags