Home » சட்டம் & அரசியல் » தொடர்ந்து தமிழினத்தை சீண்டிவரும் டில்லி. விமானநிலையத்தில் தமிழ் நீக்கம்

தொடர்ந்து தமிழினத்தை சீண்டிவரும் டில்லி. விமானநிலையத்தில் தமிழ் நீக்கம்

சென்னை விமான நிலைய அறிவிப்பு பலகையிலிருந்து காலதாமதம் என்ற உப்புசப்பற்ற காரணத்தைக் கூறி தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது

👤 Saravana Rajendran9 Feb 2018 12:23 AM GMT
தொடர்ந்து தமிழினத்தை சீண்டிவரும் டில்லி. விமானநிலையத்தில் தமிழ் நீக்கம்
Share Post

சென்னை விமான நிலையத்தில் ஆங்கிலம், தமிழ், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் அறிவிப்பு வெளியிடும் போது காலதாமதம் ஆகிவிடுவதால், தமிழ் மொழியை அகற்றிவிட்டோ என்று சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது தமிழர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சாலையின் மையில் கற்களிலிருந்து தமிழை நீக்கிவிட்டு இந்தியில் எழுதி இந்தி திணிப்பை ஏற்படுத்துவது, ரயில் நிலையங்களில் தமிழுக்கு பதிலாக இந்தியில் எழுதுவது, மாநில மொழிவானொலியில் தமிழ் ஒலிபரப்பிற்கான நேரத்தை குறைப்பது, என தொடர்ந்து தமிழை அவமதிக்கும் செயலை மத்திய பாஜக அரசு செய்துவருகிறது. தற்போது சென்னை விமான நிலைய அறிவிப்பு பலகையிலிருந்து தமிழை நீக்கியுள்ளனர்.
இதுவரை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வருகை, புறப்பாடு, விமான அறிவிப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று முதல் இந்த அறிவிப்பு பலகையிலிருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது. இதற்கு விமான நிலையம் தரப்பில் விடுத்துள்ள அறிக்கையில் இந்தி, ஆங்கிலம், தமிழ் போன்ற மூன்று மொழிகளில் தொடர்ந்து அறிவிப்பு விடும் போது ஒவ்வோன்றுக்கும் இடையே பல நிமிட காலதாமதம் ஏற்படுகிறது, ஆகவே தமிழ் மொழியை நீக்கிவிட்டோம், இந்தி மொழியின் அறிவிப்பையும் குறைத்துவிட்டோம் என்று கூறப்பட்டுள்ளது.
கிழக்காசியாவின் பல நாட்டு விமான நிலையங்களில் இன்றளவும் அழகுத்தமிழில் அறிவிப்புகள் அமுதுபோல் முழங்கிக்கொண்டு இருக்கும் போது சமஸ்கிருத இந்தி மொழித்திணிப்பில் ஈடுபடும் பாஜகவிற்கு தமிழன் தமிழ் நாடு தமிழ் என்றாலே எட்டிக்காயாக கசக்கிறது,
சென்னை விமான நிலையத்தின் இந்த நடவடிக்கை தொடர்பாக தமிழகத்தில் பல அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழ் மொழியை, தமிழ் நாட்டிலிருந்தே அழிக்கும் செயல் நடைப்பெற்று வருவதும், இதற்கு தமிழக அரசு மெளனமாக இருப்பது கடும் வேதனை அளிப்பதாக உள்ளது.
தமிழர்களின் தொடர் எதிர்ப்பைத் தொடர்ந்து விமான நிலைய இயக்குநா் சந்திர மௌலி விளக்கம் அளித்துள்ள விளக்கத்தில், தமிழ் மொழியை வேண்டுமென்றே புறக்கணிக்கவில்லை. காலை நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதனாலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பின்னா் கோளாறு சாி செய்யப்பட்டதைத் தொடா்ந்து மீண்டும் தமிழ் மொழியில் அறிவிப்பு வெளியிடப்படுவதாக தொிவித்துள்ளது.