அமொிக்காவில் புளூபாக்ஸ் என்ற அணுவியல் இயக்கத்தால் ஏற்படும் மின்சாரம் தயாரிப்பு தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தமிழரான சிறீதர் என்பவர் கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் மின்சாரம் தயாரிப்பது மிகவும் எளிது,புளூபாக்ஸ் ஒன்ரே நமது வீட்டிற்கு தேவையான மின்சாரத்தை நமக்கு வழங்கும் இதனால் நாம் இலவசமாகவே மின்சாரத்தை பெற்றுக்கொள்ளலாம்.
அரசியல் குதித்துவிட்ட கமலகாசன் தன்னுடைய அரசியல் பணியை துவக்குவதற்கு பல உத்திகளை கையாண்டு வருகிறார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் சென்றுள்ள கமலகாசன் டாக்டர் சிறீதரை கண்டு பேசியுள்ளார். அப்போது தமிழகத்திற்கு புளூபாக்ஸ் கொண்டுவருவது குறித்து ஆலோசனை நடத்தியதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பம் தமிழகத்தில் பயன்படுத்தப்படும் பட்சத்தில் மின்துறையில் தமிழகம் முதன்மை நுகா்வோா் மாநிலமாக மாறும் என்பது உண்மைதான். ஆனால் தமிழரான சீறீதர் இதை நேரடியாகவோ அல்லது தமிழக அரசுடன் ஒப்பந்தமிட்டோ வழங்கலாமே கமல் அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடித்து அதன் பிறகு புளூபாக்ஸ் மின்சாரம் வழங்கும் அதிரடி திட்டத்தை ஏன் முன்வைத்துள்ளார்.
பிகு. "அமோசன் கோ" உள்ளிட்ட பல பெரும் நிறுவனங்கள் இந்த புளூபாக்ஸ் மூலம் குறைந்த செலவில் தங்களது பயன்பாட்டிற்காக மின்சாரம் தயாரிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.