ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனி செயலாளராக இருப்பவர் வி.கார்த்திகேய பாண்டியன். நேற்று மாலை பா.ஜ.க. கொடியுடன் சிலர் இவரது வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் வீட்டிற்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். அப்போது முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு எதிராக முழக்கம் எழுப்பினர். பிறகு தப்பியோடிவிட்டனர்.
இது குறித புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாஜகவைச் சேர்ந்த நால்வரை கைது செய்துள்ளனர். கார்த்திகேயன் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து பேசிய நவீன் பட்நாயக் பாஜகவினர் அகந்தையில் இருக்கின்றனர். இந்திய மக்கள் அவர்களுக்கு சரியான பாடம் கற்றுக்கொடுப்பார்கள் என்று கூறிய அவர் தனிச்செயலாளரை தாக்கிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.