Home » சட்டம் & அரசியல் » லவ் ஜிகாத் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. அமெரிக்காவில் கமலகாசன்

லவ் ஜிகாத் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. அமெரிக்காவில் கமலகாசன்

நாட்டில் ஒரு சிலர் கூறும் லவ் ஜிகாத், குறித்தும் எனக்கு ஏதும் தெரியாது. ஆனால், ஒரு புதிய புரட்சி வந்து கொண்டு இருக்கிறது. அந்தப் புரட்சி வெறுப்புணர்வை, வெறுப்புணர்ச்சியை காதலால், அன்பால் வெல்லும். என்று நடிகர் கமல்ஹாசன் ஹார்வர்டு பல்கலையில் பேசினார்

👤 Saravana Rajendran11 Feb 2018 10:34 AM GMT
லவ் ஜிகாத் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. அமெரிக்காவில் கமலகாசன்
Share Post

அமெரிக்காவின் ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் நடந்த சிறப்பு மாநாட்டிலும் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார். வேட்டி, சட்டையில் நிகழ்ச்சிக்கு வந்த கமல்ஹாசனை அவரது ரசிகர்களும் அமெரிக்கத்தமிழர்களும் வரவேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராகப் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசனுடன் பத்திரிகையாளர் பர்கா தத் பல்வேறு சுவையான கேள்விகளைக் கேட்டார் அதற்கு கமலகாசனும் தன்னுடைய நடையில் பதிலளித்தார்.
ரஜினி அடிக்கடி கூறிக்கொள்ளும் சிஸ்டம் சரியில்லை என்பதில் இருந்து பர்காத்தின் கேள்வி ஆரம்பித்து அதற்கு பதிலளித்த கமல் "தமிழகத்தில் அரசியல் சூழல் உள்ளிட்ட எதுவுமே சரியில்லை. நான் புதிய அரசியல் கட்சி தொடங்கியதற்கான காரணமே மக்களிடம் பேசுவதற்காகத்தான், அரசியல்வாதிகளுடன் பேசுவதற்காக அல்ல. மகாத்மா காந்தியின் கனவான சுயசார்பு மற்றும் தன்னிறைவு கொண்டதாக கிராமங்களை மாற்ற விரும்புகிறேன். இதற்காக மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்தையும் தத்தெடுத்து, அதை உலக அளவுக்கு சிறந்த கிராமமாக மேம்படுத்த திட்டம் என்னிடம் இருக்கிறது.
எனது நோக்கமும், ரஜினியின் நோக்கமும் ஒன்றுதான். எதிர்காலத்தில் அவருடன் தேர்தல் கூட்டுசேரமாட்டேன் என்று இப்போது கூற முடியாது. எங்களின் இரண்டுபேருக்குமிடையே சில ஒற்றுமைகள் இருந்தால், தேர்தல் அறிக்கைகள் அதற்கு ஏற்றார்போல் இருந்தால், இருவர் ஆரம்பிக்கும் கட்சிகளுக்கு இடையே கூட்டணி இருக்கும். அதேசமயம், எனது நிறம் கறுப்பு, ரஜினியின் நிறம்(மதவாதநிறமாக) காவியாக இருக்காது என நம்புகிறேன். தேவைப்பாட்டால் ரஜினியுடன் மட்டுமல்லாமல் மற்ற கட்சிகளுடன் இணைந்து செயலாற்றுவேன். ஆனால், தேர்தலுக்கு முந்தைய கூட்டணி இருக்குமே தவிர, தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி இருக்காது. தேர்தல் முடிவுகளில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால்கூட அது மக்களின் தீர்ப்பாக ஏற்றுக்கொள்வேன். அதற்காக நான் வேறுயாருடனும் கூட்டணிக்காக காத்திருக்கவும் மாட்டேன், பேரம் பேசவும் மாட்டேன். மக்கள் எனக்கு அடுத்த வாய்ப்பு கொடுக்கும் வரை காத்திருப்பேன். அதேசமயம், எனக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், மக்கள் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதையும் விரும்புகிறேன்.
டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால் என்னை சென்னையில் சந்தித்துப் பேசினார் அப்போது. தன்னுடன் கூட்டணி வைப்பது குறித்தும் பேசினார். நானும் அதை கருத்தில் கொண்டு இருக்கிறேன். அவருடன் மட்டுமல்ல மற்ற தலைவர்களும் கேட்டு இருக்கிறார்கள்.
நான் தொடங்கும் கட்சிக்கு உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் ஆதரவு அளிப்பார்கள், தங்களின் கருத்துகளையும் தெரிவிக்க வேண்டும் என கேட்கிறேன். தேர்தல் சமயத்தில் அதற்கான நிதி மக்களிடம் இருந்து கிடைக்கும் என்பதில் நம்பிக்கையாக இருக்கிறேன்.''
இந்தியாவில் நடைபெறும் மதவெறுப்புணர்வு நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கான பதிலை தவிர்த்துவிட்டார். மீண்டும் பர்கா தத் லவ் ஜிகாத் பற்றி அழுத்திக் கேட்டபோது அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார்.
இந்து மத அமைப்பினர் இஸ்லாமியர் இளைஞர்கள் இந்துப்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுகிறார்கள் என்று கூறி பல இடங்களில் வன்முறையில் இறங்குகின்றனர். இன்று உத்திரப்பிரதேச சாமியார் முதல்வர் ஆதித்யநாத் லவ் ஜிகாத் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்து இந்து இஸ்லாமியர்களுக்கிடையே வன்முறையை விதைத்தார் என்று கூறிக்கொண்டு இருக்கும் நிலையில் ஹாதியா, ஆரிபா போன்ற பெண்களில் விவகாரம் இன்றளவும் இந்தியா முழுவதும் பேசிக்கொண்டு இருக்கையில் தமிழகத்தில் அரசியலில் குதித்துவிட்டேன் என்று கூறிகொள்ளும் கமலகாசன் லவ்ஜிகாத் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது என்று தெரிவித்திருப்பது மிகவும் வியப்பை அளிக்கிறது,
இவரும் ரஜினியும் சமூகத்தில் உள்ள எந்த பிரச்சனைகளுக்குமே கருத்து கூறாமல் தெரியாது, தெரியாது என்று விலகிச்செல்வது தான் புதிய அரசியல் பாதையா என்று புரியாமல் மக்கள் விழிக்கின்றனர்.