Home » சட்டம் & அரசியல் » பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வு மெகபூபா முப்தி

பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வு மெகபூபா முப்தி

இந்தியாவின் அண்டைநாடான பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே தீர்வு காண முடியும் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

👤 Saravana Rajendran13 Feb 2018 1:10 AM GMT
பேச்சுவார்த்தை மட்டுமே  தீர்வு மெகபூபா முப்தி
Share Post

ஜம்மு-காஷ்மீரில் நடக்கும் தீவிரவாத தாக்குதல் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியஅம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி " மாநிலத்தில் ஏற்படும் தீவிரவாத தாக்குதல் மனித உயிரிழப்புகள் போன்றவற்றைத்தடுத்து நிறுத்த பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர வேறு வழி இல்லை.

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து நாங்கள் பேசவில்லை என்றால் வேறு யார் பேசுவார்கள்? காஷ்மீரிகள் உயிரிழக்கிறார்கள், காஷ்மீர் பாதிக்கப்படுகிறது, இங்கு வந்து பீகார் மாநில மக்கள் பேசப்போவது இல்லை. பாகிஸ்தானுக்கு எதிராக போரிட்ட எல்லா போரிலும் இந்தியா வெற்றி பெற்று உள்ளது. அப்படியிருந்த போதும் கூட, பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர வேறு எந்த வழியும் தற்போது இல்லை" என்று அவர் கூறினார்.
கடந்த இரண்டு நாளில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ராணுவ முகாம்களில் நுழைந்து இரண்டு முறை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 5 ராணுவ வீரர் உட்பட ஒரு சிவிலியன் மரணமடைந்தார். மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதல் முடிவுக்கு வந்த நிலையில் அங்கு சென்று பார்வையிட்ட இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியபோது, பாகிஸ்தான் இதற்கு சரியான விலை கொடுக்கவேண்டி இருக்கும் என்று கூறினார்.