மோடி டூ மோடி

கருப்புப் பணம் ஒழிக்கிறேன் என்று கூறிக்கொண்டு ஒட்டுமொத்த இந்தியாவின் நடுத்தர, ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்த மோடி, பணக்காரர்களின் உற்ற நன்பனாக விளங்குகிறார். உற்ற நன்பராக விளங்குவதால் தவறொன்றுமில்லை, ஆனால் அந்த நன்பர்கள் கொள்ளையடித்தால் அவர்களை பத்திரமாக வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்துத்து நட்பிற்கு இலக்கணமாக திகழ்கிறார். அன்று சுஸ்மா சுவராஜுக்கு ஒரு லலித் மோடி என்றால் இன்று நரேந்திர மோடிக்கு ஒரு நீரவ் மோடி மோடியின் 11,700 கோடி கொள்ளை

👤 Saravana Rajendran15 Feb 2018 11:55 PM GMT
மோடி டூ மோடி
Share Post

குஜராத்தைச் சேர்ந்த நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் ரூ11,700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்குப் பின்னனியில் அதிரவைக்கும் ஒரு வரலாறு உள்ளது. பஞ்சாப் வங்கியிடம் போலியாக உத்திரவாத பாத்திரம்(பேங்க் கியாரண்டி) வாங்கி இந்த மோசடியைச் செய்து இருக்கிறார். வாங்கிய பணத்தையும் திரும்பக் கொடுக்காமல் இவர் இப்போது சுவிட்சர்லாந்திற்கு ஓடிவிட்டார்.
வைர வணிகத்தின் தலைநகரமாக திகழும் பெல்ஜியம் தான் இவரது வாழ்க்கை முதல் அத்தியாயம் துவங்குகிறது. வணிகத்தின் மீது இருந்த ஆர்வத்தால் கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு வைர வியாபாரத்தில் இறங்கினார்
தனது மாமாவின் நிறுவனமான கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தில் இணைந்து வியாபாரத்தைக் கவனித்தார். பிறகு தானே 1999-ஆம் ஆண்டு பயர்ஸ்டோன் என்ற வைர வணிக நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார்.
குடும்பம் சொல்லித்தந்த பிராடுத்தனம்
வங்கி உத்திரவாதப் பத்திரம் வாங்கி எப்படி மோசடி செய்வது என்று அவர்களது குடும்ப வணிக உத்தியாக உள்ளது. இவர்கள் ஏற்கனவே இப்படி செய்திருக்கின்றனர். ஆனால் அப்போதெல்லால் சிறிய தொகையாக வாங்கி வணிகத்தை சரிகட்டிவிட்டு கடனை விரைவில் கொடுத்துவிடுவார்கள். ஆகையால் இந்த பிராடுத்தனம் அவ்வளவாக வெளியே வரவில்லை.
1999-ஆம் ஆண்டு மும்பையில் துவங்கிய இவரது நிறுவனம் சில ஆண்டுகளில் பெரிதாக வளர்ந்தது. அதற்கேற்றார் போல் கோடிக்கணக்கில் வங்கிகள் இவருக்கு கடன் வழங்கியது. அந்தக்கடனுக்கு போலி வங்கி உத்திரவாதப்பத்திரம் காரணமாக இருந்தது. 1999-ஆம் ஆண்டு நிறுவனம் ஆரம்பித்த அவர் 2014 ஆம் ஆண்டு போர்ப்ஸ் இதழில் உலக பணக்காரர்கள் பட்டியில் இடம்பெற்றார். எல்லாம் மக்களின் பணத்தில் இந்த சித்துவிளையாட்டு விளையாடி பணக்காரர் ஆகியுள்ளார்.
ஆண்டுக்கு 500 கோடி வரை இவர் வருவாய் பார்த்தார். இந்தப்பணத்தாசை மேலும் மேலும் வங்கிகளை ஏமாற்ற துணை போனது வங்கி அதிகாரிகளும் இவரது மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளனர். 2007-ஆம் ஆண்டிலிருந்து இவரது மோசடிகள் மெல்ல தெரியவர இவரது வணிகத்திற்கு பல்வேறு கண்காணிப்புகள் துவங்கியது. இதனால் இவர் மெல்ல வணிகத்தை இந்தியாவில் இருந்து அயல்நாடுகளில் மாற்றிவிட்டார். 2014-ஆம் ஆண்டு மோடி அரசாங்கம் வந்த பிறகு மீண்டும் இந்தியாவில் வணிகத்தை முழு வீச்சில் துவங்கியுள்ளார்.
துவக்கத்திலேயே இறக்குமதியில் மோசடி செய்துவிட்டார். இருப்பினும் புலாணாய்வுத்துறையின் கைகள் கட்டப்பட்டுவிட்டது.
2014 -ஆம் ஆண்டு 300 கோடி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது, ஆனால் அப்படியே கிட்டப்பில் போடப்பட்டது.
மோடி டு மோடி
மோடி என்று பெயர் வைத்தாலே வங்கிகளில் ராஜமரியாதைதான், இவருக்கும் அதே ராஜமரியாதைதான் கடந்த 3 ஆண்டுகளில் 2015,16,17 நீரவ் மோடி என்ற வணிகத்தளத்தை இந்தியாவில் அபரீதமாக விரிவுபடுத்தினார். இதற்கு வங்கியில் இருந்து கடன் வாங்கியுள்ளார்.
மாயம் மல்லையா, லலித் மோடி எல்லாம் எப்படி ஓடினார்களோ அப்படித்தான் இவரும் ஓடி இருக்கிறார். சுவிட்சர்லாந்தில் தற்போது இந்திய மக்களின் வரிப்பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்திக் கொண்டு இருக்கிறார். ஆம் இங்கு விவசாயிகள் லோனுக்கு வட்டி கொடுக்க முடியாமல் விஷம் குடிக்கும் போதுதான் அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
இறுதியாக வங்கி அதிகாரிகள் அளித்த புகாரை அடுத்து வேறு வழியின்று சிபிஅய் விசாரணைக்கு சென்றது. சிபிஅய் விசாரணைக்கு வரும் முதல் நாளே சிறப்பு விருந்தினர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகளைப் பயன்படுத்தில் சுமார் 70 பெரிய லக்கேஜ்களுடன் சிறப்பு விமானத்தில் சுவிஸ்சர்லாந்த் தப்பிவிட்டார். சுவிசர்லாந்து சென்றவர். அங்கே நரேந்திர மோடியைச் சந்தித்து படமும் எடுத்துக்கொண்டார்.