குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரியான நிரவ் மோடி உலகம் முழுவதும் பல இடங்களில் தனது நகைக்கடைகளை வைத்துள்ளார். இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து சுமார் 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மோசடி செய்து சிபிஅய் விசாரணையின் போது தப்பிச்சென்றுவிட்டார்.
இவர் மீது பல புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.
அதனை தொடர்ந்து, 31-ம் தேதி அவரது நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் தேடப்படுவதாக ஜனவரி 31ம் தேதியே சி.பி.ஐ. அறிவித்தது. ஆனால் கடந்த ஜனவரி 1-ம் தேதியே நிரவ்மோடி நாட்டைவிட்டு வெளியேறியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த நிலையில் நீரவ் மோடிக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.5,100 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கம், வைரம் உள்ளிட்ட பொருட்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
இவர் தற்போது அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் எஸ்க்ஸ்ஹவுஸ் அப்பார்ட்மென்டில் பதுங்கியிருப்பதாக புது தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மல்லையா, லலித் மோடி, வரிசையில் தற்போது நீரவ் மோடியும், இடம் பெற்றுள்ளதால் இதுகுறித்து பதிலளிக்குமாறு, மோடிக்கு பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
மோடிக்கு வலதுசாரி கொள்கைகொண்ட அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் மதிப்பு மிக்க நன்பர் ஆவார் ஆகவே டிரம்பிடம் கூறி மோடியை இந்தியாவிற்கு நாடுகடத்த வேண்டுகோள் விடுப்பாரா என்பது மிகபெரிய கேள்விக்குறியாக உள்ளது