ஐக்கியதேசியக் கட்சி, இலங்கை சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்கள் மற்றும் இலங்கையின் மூத்த அரசியல் நிபுனர்கள் உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்கு வந்த பிறகு கொழும்புவில் அரசியல் மாற்றம் குறித்த கலந்தாய்வை நடத்திவருகின்றனர்.
சமீபத்தில் நடந்த முக்கிய சந்திப்பு ஒன்ரில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டாம் என அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆலோசனை கூறியதாக தகவல்கள் கசிந்துள்ளது.
தற்போது தொடரும் நல்லாட்சியை தொடர்ந்து அதிபரும், பிரதமரும் இணைந்து தரவேண்டும் என்றும், நல்லாட்சி நீடிப்பதற்கான அனைத்து ஆலோசனைகளையும் வழங்குவோம் கூறிய பன்னாட்டு அரசியல் ஆலோசகர்கள், 2020 வரை இந்த அரசின் செயல்பாடுகள் தொடரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேஉள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம் மீண்டும் ஆட்சியில் அல்லது அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக உருவாகிவிடக் கூடாது என்றும், ஒருவேளை
மைத்திரிபால சிறிசேனா, ரணில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து மகிந்தா ராஜபக்சேவின் ஆதரவுடன் புதிய அரசு அமையுமானால் அனைத்து நிதியுதவிகளும் நிறுத்தப்படும் என அரசியல் ஆலோசகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதிபரின் எண்ணம்
மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை ரணிலுக்கு பதில் பிரதமராக அமர்த்த அதிபர் மைத்திரிபால சிறிசேன விரும்புவதாக அதிபரின் சுதந்திரா கட்சி தலைவர்கள் கூறியதாக தகவல்கள் வந்தது இதனை அடுத்து இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.