ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டாவில், பழைமையான ராமர் கோவில் உள்ளது. ஆந்திர அரசுக்கு சொந்தமான இந்த ராமர் கோவில், சமீபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதை தற்போது, தேவஸ்தானம் பராமரித்து வருகிறது. கோவிலுக்கு எதிரில், வனப்பகுதியை ஒட்டிய இடத்தில், பெரிய ஏரி உள்ளது.
நேற்று காலையில், இந்த ஏரியில் ஐந்து உடல்கள் மிதப்பதை பார்த்த பொதுமக்கள், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கடப்பா அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஏரியில் வேறு ஏதாவது உடல்கள் சிக்கியுள்ளனவா என, நீச்சல் வீரர்களின் உதவியுடன், தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுஉள்ளனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு. வனப்பகுதியில் செம்மரம் வெட்ட, சிலர் சென்றனர் என்றும், அவர்களை பிடிக்க போலீசார் விரட்டி சென்ற போது, தப்பி செல்வதற்காக ஏரியில் குதித்த அவர்கள் இறந்து விட்டனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.மேலும், உயிரிழந்த 7 பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
ஆந்திராவிற்கு கூலிவேலை செய்யச்செல்லும் தமிழர்களை தொடர்ந்து செம்மரம் கடத்தவந்தவர்கள் என்று கூறி காவல்துறை கொடூரமாக துண்புறுத்தி கொலைசெய்துவருகிறது, 2016 ஆகஸ்ட் மாதம் வேலூர் சேலம், கிருஷ்ணகிரியைச்சேர்ந்த 20 தமிழக இளைஞர்களை செம்மரம் கடந்த வந்தார்கள் என்று கூறி, அவர்களை கொடூரமாக சித்திரவதை செய்து பின்பு கொலை செய்தனர். அவர்களின் உடலில் ஆங்காங்க தீயால் எரிந்த அடையாளங்கள் உயிரோடு தீவைத்து கொலைசெய்துள்ளனர் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அந்த கொலைவழக்கு விசாரணையில் உள்ள நிலையில் தற்போது செம்மரம் வெட்டவந்தார் என்று கூறி விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்திய போது, அவர்கள் மரணம் அடைந்த நிலையில், கொலையை மறைப்பதற்காக, உடல்களை ஏரியில் வீசியுள்ளதாக சந்தேகம் எழுகிறது. போலீசாரின் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையின் அறிக்கை ஆகியவற்றுக்கு பின்பே, முழு விபரமும் தெரிய வரும்.மேலும், ஏரிக்கு அருகே கிடந்த பைகளில், சேலம் என எழுதப்பட்டுள்ளதால், இறந்தவர்கள் சேலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க லாம் என தெரிய வந்துள்ளது.
இறந்தவர்களை உடலை தமிழக மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்தால் மட்டுமே உண்மை வெளிவரும்.