Home » சட்டம் & அரசியல் » வெட்டியான விமர்சனங்களுக்கு பதில் கூறுவது நமது வேலையல்ல, கமலகாசன்

வெட்டியான விமர்சனங்களுக்கு பதில் கூறுவது நமது வேலையல்ல, கமலகாசன்

கைநீட்டி காசுவாங்கியதால் தான் உங்கள் வாக்குகளால் பதவி பெற்றவர்கள் தவறு செய்யும் போது நீங்கள் தட்டிக்கேட்க இயலாமல் போய்விடுகிறது

👤 Saravana Rajendran21 Feb 2018 3:44 PM GMT
வெட்டியான விமர்சனங்களுக்கு   பதில் கூறுவது நமது வேலையல்ல, கமலகாசன்
Share Post

மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் கமலகாசனின் மக்கள் நீதி மையம் என்ற புதிய கட்சி உதயமானது. இந்தக் கட்சியின் கொடியை ஏற்றிவைத்த பின்னர், மேடையில் கமலகாசனுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்ட அமைச்சருமான சோம்நாத் பாரதி மற்றும் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் ஆகியோர் அமர்ந்திருந்தனர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் பொதுக்கூட்டம் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது.
கமலகாசன் பேசும் முன்பு டில்லி முதல்வர் அரவிந்த கேஜரிவால் பேசும் போது,"டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசும்போது, `தமிழகத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம். கமல்ஹாசனை ஒரு நல்ல நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அந்த காரணத்துக்காக மட்டுமே நான் இங்கு வரவில்லை. அவர் ரியல் லைஃப் ஹீரோ. தமிழகத்தில் மாற்றத்தை விரும்பும் மக்களுக்கான கட்சியின் தொடக்கவிழாவில் கலந்துகொள்வதில் பெருமையும், கௌரவுமும் கொள்கிறேன்.
டெல்லியில் 4 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியை நாங்கள் தொடங்கினோம். மாற்றத்தை விரும்பிய டெல்லி மக்கள் 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை எங்களுக்கு அளித்தார்கள். டெல்லி மக்கள் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளையும் மக்கள் புறக்கணித்தனர்.
தமிழக மக்கள் அ.தி.மு.க. - தி.மு.க. என இரண்டு ஊழல் கட்சிகள் இடையில் சிக்கித் தவிக்கிறார்கள். உங்களுக்கு ஊழல் வேண்டுமென்றால் அவர்களுக்கு வாக்களியுங்கள். நேர்மையான அரசு வேண்டுமானால் கமலகாசனுக்கு வாக்களியுங்கள். ஒவ்வொரு தேர்தலின்போதும் ஊழல் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டிய சூழல் உங்களுக்கு இருந்தது. ஆனால், தற்போது நீங்கள் மாற்றத்தை நோக்கி கமலுக்கு வாக்களியுங்கள். அ.தி.மு.க. - தி.மு.க. ஆகிய கட்சிகளை அகற்ற தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள். டெல்லி மக்கள் நிகழ்த்திய சாதனையை முறியடித்து தமிழகத்தில் புதிய மாற்றத்தை உருவாக்குங்கள்" என்று பேசினார்.
கேரள முதல் விடியோ கான்பிரன்ஸ் மூலம் திருவனந்தபுரத்தில் இருந்து கமல்க்கு வாழ்த்து தெரிவித்தார். நேரடி ஒளிபரப்பான அதில் அவர் கூறியதாவது, "என் அன்பார்ந்த வணக்கம். மதிப்பிற்குரிய தமிழ் மக்களுக்கு என் வணக்கம்" என்று தமிழில் கூறி வீடியோ மூலம் கமலின் அரசியல் பிரவேசத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மதுரையில் புதிய கட்சியைத் துவங்கி கமலகாசன் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு வந்திருக்கும் பொதுமக்கள் முன்பு பேசுகையில் கைநீட்டி காசுவாங்கியதால் தான் உங்கள் வாக்குகளால் பதவி பெற்றவர்கள் தவறு செய்யும் போது நீங்கள் தட்டிக்கேட்க இயலாமல் போய்விடுகிறது என்று கூறினார்.
ஒருவோட்டிற்காக நீங்கள் 6 ஆயிரத்தை வாங்காமல் இருந்திருந்தால் 6 லட்சம் கிடைத்திருக்கும் என்று கூறியவர் உங்கள் ஓட்டின் மதிப்பு தெரியாமல் அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டீர்கள்,கமலகாசன் கூறினார்.
மேலும் அவர் பேசியதாவது, கட்சியின் கொள்கைகள் பற்றி கேட்கிறார்கள். கல்வி எல்லாத்தரப்பினருக்கும் போய் சேர வேண்டும். சாதி, மத பெயர்களை சொல்லிச் சொல்லி செய்த விளையாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும். என்ன நடக்க வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக இருப்போம். மின்சாரம் கிடையாது என்று சொல்ல வேண்டிய அவசியம்இல்லை, ஊழலை குறைத்தால் மின்சாரம் வரும்
நல்ல கட்சிக்கு ஓட்டு போட்டிருந்தால் 6 லட்சம் கிடைத்திருக்கும். 6 ஆயிரத்தை 5 வருடத்திற்கு வகுத்துப் பாருங்கள் ஒரு நாளைக்க 90 பைசாவோ என்னவோ தான் வரும். ஆண்டுமுழுவதும் அவரிடம் நீங்கள் போய் எதுவும் கேட்க முடியாது. அவரிடம் கேட்டால் காசு வாங்கல வாயை பொத்திக் கொண்டு போ என்பார்கள். திருடன் என்று சொல்லும் போது தலை தெறிக்க ஓட வேண்டாமா, பின்னால் திரும்பி பார்த்து என்ன கூப்பிட்டது போல இருக்கிறது என்றால் எப்படி அதை தான் டுவிட்டரில் போட்டேன், இனியும் இந்த நிலை வரக் கூடாது என்று கமல் பேசினார்.
பொதுமக்கள் சார்பில் பாஜக தமிழக தலைவர் கமலகாசனை போன்சாய் மரம் என்று கூறியிருந்தார், அதற்கு நீங்கள் என்ன பதில் கூறுகிறீர்கள் என்று கமலைப் பார்த்து ஒரு பொதுஜனம் கேள்வி எழுப்பி இருந்தது, அந்தக் கேள்வியை வாசித்த போது கமலகாசன் கூறியதாவது, " விமர்சனங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிக்க தேவையில்லை, வேலை இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பார்கள், நாம் வேலையில் கவனமாக இருப்போம், விமர்சனங்களுக்கு பதில் அளித்து நேரத்தை வீனாக்கவேண்டாம் என்று தமிழிசைக்கு பதில் கொடுத்தார்.