வெளிப்படை நிர்வாகக் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட 2017-ஆம் ஆண்டுக்கான ஊழல் நிறைந்த நாடுகள் குறித்த பட்டியலில் ஊழல் இல்லாத நாடுகள் பட்டியலில் சிங்கபூர் 6-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
180 நாடுகள் பங்கேற்ற அந்த ஆய்வில், சிங்கப்பூர் 84 புள்ளிகள் பெற்று ஆறாம் இடத்தைப் பிடித்தது. இவ்வறிக்கையின் முடிவுகள் பற்றிக் கருத்து கூறிய லஞ்ச ஊழல் புலனாய்வுத்துறை சிங்கப்பூரில் ஊழல் குற்றங்கள் மிகவும் குறைவான அளவிலேயே உள்ளன, இருப்பினும் எங்கள் கண்காணிப்பு மேலும் தீவிரமாகும் விரைவில் உலகில் ஊழல் இல்லாத நாடுகளில் முதல் நாடாக சிங்கபூர் மாறும் என்று கூறினார்கள்.
முதலிடம்
ஆசிய நாடுகளில் ஊழல் அற்ற நாடுகளில் முதல் இடத்தில் சிங்கபூர் உள்ளது.
ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்திலும் டென்மார்க் இரண்டாமிடத்திலும் உள்ளன. பின்லாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் 3ஆம் இடத்தை பெற்றுள்ளன.சிங்கப்பூர், சுவீடன் நாடுகள் 6 ஆம் இடத்தையும், கனடா, லூக்ஸம்பெர்க் நெதர்லாந்து, யுகே ஆகிய நாடுகள் 8 ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் சீனா 77 வது இடத்திலும், பிரேசில் 96 வது இடத்திலும், ரஷ்யா 135 வது இடத்திலும் உள்ளது. இந்தப்பட்டியலில் கடைசியாக அதாவது ஊழல் அதிகம் நிறைந்த நாடுகளின் வரிசையில் சோமாலியா முதலிடத்தில் உள்ளது. தெற்கு சூடான் இரண்டாமிடத்திலும் சிரியா மூன்றாமிடத்திலும், ஆப்கானிஸ்தான் 4ஆம் இடத்திலும் ஏமன், சூடான் நாடுகள் 5ஆம் இடத்திலும் உள்ளன.
180 ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 81வது இடத்தில் உள்ளது. பிலிப்பைன்ஸ், இந்தியா, மாலத்தீவு போன்ற நாடுகள் ஊழலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளதுஇந்த நாடுகளில் தான் பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்படுவதும் அதிகமாக உள்ளது என்றும் கடந்த 6
ஆண்டுகளில் மட்டும் இந்த நாடுகளில் ஊழலுக்கு எதிரான கட்டுரைகளை வெளியிட்ட 15க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.