Home » சட்டம் & அரசியல் » தமிழிசைக்கு கொலை மிரட்டலா? காவல் நிலையத்தில் புகார்

தமிழிசைக்கு கொலை மிரட்டலா? காவல் நிலையத்தில் புகார்

தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தர ராஜனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

👤 Saravana Rajendran24 Feb 2018 4:03 PM GMT
தமிழிசைக்கு கொலை மிரட்டலா? காவல் நிலையத்தில் புகார்
Share Post

தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தரராஜன், மோடி மற்றும் பா.ஜ.க.வினாின் திட்டங்களையும், கொள்கைகளையும் தாக்கி பேசுபவா்களுக்கு கடுமையாக பதிலடி கொடுத்து வருகிறாா். இருப்பினும் தமிழகத்தில் உள்ள தமிழக இளைஞர்கள் பா.ஜ.க. மாநில தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அக்கட்சியின் தேசிய செயலாளா் ஹெச்.ராஜாவை சமூகவலைதளங்களில் கடுமையான நகைச்சுவை சிரிப்பு அரசியல் வாதியாகவே பார்த்து மீம்ஸ் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனா்.
சமீபத்தில் ஆண்டாள் விவகாரம் தொடர்பாக இவர் பேசியதும், அதே நேரத்தில் விஜயேந்திர சரஸ்வதி தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காததும் அமைதியாகவும் இருந்தார். இதனை அடுத்து தமிழிசை சௌந்தரராஜனுக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக புகாா் தொிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தன்னை தரக்குறைவாகவும், அசிங்கமான வாா்த்தைகளாலும் திட்டுவதாகவும் அவா் குற்றம் சாட்டி இருந்தாா்.
மோடி நாளை தமிழகம் வரவுள்ள நிலையில் தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக சென்னையில் உள்ள திநகர் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இவரது இந்த புகாரையும் இளைஞர்கள் சமூகவளைதளத்தில் நகைச்சுவையாகவே பார்க்கின்றனர்.
இவர்களை சிரிப்பு அரசியல் வாதிகள் என்ற பார்வையில் மீம்ஸ்கள் போட்டுவருகின்றனர்.