Home » சட்டம் & அரசியல் » பெரியார் பெயரைச் சொன்னதுமே அதிர்ந்த தமிழகம்

பெரியார் பெயரைச் சொன்னதுமே அதிர்ந்த தமிழகம்

பெரியார் சிலையை உடைப்பேன் என்று தொடர்ந்து பேசி தமிழகத்தில் மதக்கலவரத்தை உருவாக்க துடிக்கும் பா.ஜ.க.தேசிய செயலாளர் எச்.ராஜா வை கண்டித்து தமிழகம் எங்கும் போராட்டம் நடத்தப்பட்டது

👤 Saravana Rajendran8 March 2018 12:58 AM GMT
பெரியார் பெயரைச் சொன்னதுமே அதிர்ந்த தமிழகம்
Share Post

செந்துறையில் செந்தீ!
அரியலூர் மாவட்டம், செந்துறையில் அனைத்துக் கட்சி தமிழர்களும் செந்தீயோடு கிளர்ந்தெழுந்து கொடூ ரன் கொடும்பாவியைக் கொளுத்தி சாம்பலாக்கினர்.
நேற்று (6.3.2018) மாலை 5.30 மணிக்கு செந்துறை அம்பேத்கர் சிலை அருகில் எச்.ராஜாவின் உருவ பொம்மையை பல்வேறு கட்சியினர் எரித்தனர். அதன் விவரம் வருமாறு:
தி.மு.க. சார்பில் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி, ஒன்றிய செயலாளர்கள் மு.ஞான மூர்த்தி, பூ.செல்வராசு, சிவ.பாஸ்கர், கே.சி. பொன்னுசாமி, அகிலன், செல்வம், அன்பழகன், பன்னீர் செல்வம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் ம.கருப்பு சாமி, க.பாலசிங்கம், வெ.செல்லமுத்து, பு.தீரவளவன், ந.கருணாநிதி, குபேந்திரன், ரவிவளவன், வீரவளவன், க.சக்திவேல், இளங்கோவன், சந்திரகாசு, பாலு.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டாரத் தலைவர் ம.கந்தசாமி.
கழக பொறுப்பாளர்கள்: மாவட்ட தலைவர் விடு தலை நீலமேகம், மண்டல செயலாளர் சு.மணிவண்ணன், மாவட்ட அமைப்பாளர் இரத்தின.இராமச்சந்திரன், மா.து. செயலளர் சோ.க. சேகர், மாவட்ட இளைஞரணி தலைவர் பொன்.செந்தில் குமார், ஒன்றிய தலைவர் மா.சங்கர், ஒன்றிய அமைப்பாளர் வெ.இளவரசன், ஒன்றிய செயலாளர் மு.முத்தமிழ்ச்செல்வன், அரியலூர் ஒன்றிய செயலாளர் மு.கோபாலகிருட்டிணன், பழ.இளங்கோவன், பெ.கோ.கோபால், இராசா, செல்வக் குமார், சி.கருப்புசாமி, இரா.அறிவழகன், தமிழரசன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு எச்.ராஜாவின் உருவ பொம்மையை எரித்தனர்.
வேலூர் வெகுண்டெழுந்தது
திரிபுரா மாநிலத்தில் புரட்சியாளர் லெனின் சிலையை அகற்றிய பாசிச ஆட்சியைக் கண்டித்தும் தமிழகத்தில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று கூறிய இந்து வெறியன் எச்.இராஜாவைக் கண்டித்தும் திராவிடர் கழகத்தின் சார்பில் வேலூரிலுள்ள பெரியார் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழக மாவட்ட செயலாளர் கு.இளங்கோவன் தலைமை யேற்று நடத்தினார்.
தந்தை பெரியார் சிலைக்கு திமுக மருத்துவர் அணியைச் சேர்ந்த மருத்துவர் முகம்மது சகி மாலை அணிவித்தார். செயலாளர் எஸ்.தயாநிதி ஆகியோர் உரை யாற்றினர். அவர்கள் தங்களது உரையில் திரிபுராவில் லெனின் சிலையை அகற்றிய பாசிச பா.ஜ.க.வை கண் டித்தும் அங்கு மக்கள் தாக்கப்பட்டு வீடுகள் எரிக்கப் பட்டதை கண்டித்தும், தந்தை பெரியார் சிலயை அகற்ற வேண்டும் என்று கூறிய இந்து வெறியன் எச்.இராஜா வைக் கைது செய்யக்கோரினார்கள்.
கலந்துகொண்டோர்: திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட அமைப்பாளர் ச.கி.செல்வநாதன், மாநகர தலைவர் ச.கி.தாண்டவமூர்த்தி, மாநகர ப.க. செயலாளர் அ.மொ.வீரமணி, மாநகர அமைப்பாளர் ந.சந்திரசேகரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ச.கலைமணி பழனியப்பன், பொதுக்குழு உறுப்பினர் தா.நாகம்மாள், மாணவரணி மாநகர அமைப்பாளர் அ.ஜெ-.ஓவியா, மகளிரணி இ.சகுந்தலா, வீ.பொன்மொழி, இ.கயல்விழி.
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட குழு உறுப்பினர் கோவிந்தசாமி, வட்ட செய லாளர் நாகேந்திரன், காசி, செ.ஞானசேகரன், பி.சிறீதரன், கோவிந்தசாமி, முருகன், ஏகலைவன், மகாலிங்கம், சக்திவேல், ஜி.நரசிம்மன், காசிநாதன், பாபு.
இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் மேனாள் மாவட்ட தலைவர் கதிர்வேல், மண்டல தலைவர் ரகு, மேனாள் மாநகராட்சி உறுப்பினர் கோதண்டபாணி, மாவட்ட சேனா தலைவர் அரிகிருஷ்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாஸ்கரன், காட்பாடி இளைஞர் காங்கிரஸ் கார்த்தி, 6ஆவது மண்டலத் தலைவர் அசோக் குமார், பிரவின், சதீஷ்.
புதுவையில் பூகம்பம்
பூகம்பமாய் புறப்பட்டனர் அனைத்துக் கட்சியினரும். புதுச்சேரி அண்ணா சிலை அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகள், அமைப்பு கள்.
திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.அய். புதுச்சேரி, பகுத்தறி வாளர் கழகம், தமிழர் தேசிய இயக்கம், தமிழர் களம், அண்ணா பேரவை, மீனவர் விடுதலை வேங்கைகள், புதுவை சிவம் இலக்கிய பேரவை, சமூக நீதிப் பேரவை உள்பட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டனர்.
காரைக்குடியில் கனல்
பெரியார் சிலையை உடைப்பேன் என்று தொடர்ந்து பேசி தமிழகத்தில் மதக்கலவரத்தை உருவாக்க துடிக்கும் பா.ஜ.க.தேசிய செயலாளர் எச்.ராஜா வை கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் மண்டல தலைவர் சாமி.திராவிடமணி தலைமையில் தந்தை பெரியார் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க. மாவட்ட இலக்கிய அணி தலைவர் இராம.சீனிவாசன், வட்ட செயலாளர் அய்யப்பன்,சி.பி.அய் சார்பில் பழ. இராமச்சந்திரன்,கருப்பையா,
சி.பி.எம். சார்பில் வேணுகோபால், வி.சி.க.மாவட்ட செயலாளர் உதயகுமார், மெ.கணேசன், இளைய கவுத மன், ம.ம.க. நகர செயலாளர் சித்திக், த.ம.ஜ.க நகர செயலாளர் காரை பசீர், தி.இ.த.பேரவை நகர செயலாளர் ந.நவில், தி.க.மாவட்ட செயலாளர் வைகறை,மாவட்ட துணை தலைவர் கொ.மணிவண்ணன்,மாவட்ட துணை செயலாளர் இ.ப.பழனிவேலு, நகர தலைவர் ந.செக தீசன், நகர செயலாளர் தி.கலைமணி, ஒன்றிய தலைவர் வீர.சுப்பையா, ஒன்றிய செயலாளர் கல்லூர் செல்வமணி, மாவட்ட ப.க.தலைவர் எஸ்.முழுமதி, மாவட்ட செயலா ளர் ந.செல்வராசன், மாவட்ட து.செயலாளர் ந.முருக தாசு, மாவட்ட அமைப்பாளர் கி.மணிவண்ணன், உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும்,பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். தலைமை கழக பேச்சாளர் தி.என்னாரசு பிராட்லா ஆகியோர் ஆர்ப்பாட்ட முழக்கங் களை எழுப்பினார்.
மயிலாடுதுறையில் மகத்தான எழுச்சி
பெரியார் சிலையை அகற்றுவோம் என இணையத்தில் பதியவிட்டு தமிழகத்தை கலவர பூமியாக்க முயற்சிக்கும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவைக் கண்டித்தும் தமிழக அரசு உடனடியாக அவரை கைது செய்யக்கோரியும் அனைத்து கட்சி சார்பில் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் நேற்று 6.3.2018 மாலை 6 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் முடியும் தருவாயில் பலர் எச்.ராஜாவின் உருவப்படத்தினை செருப்பால் அடித்து கொளுத்தினர். பின்னர் அங்கிருந்து எச்.ராஜாவிற்கு எதிராக முழக்கமிட்டவாறு ஊர்வலமாக சென்று மயிலாடுதுறை காவல்நிலையத்தில் அனைத்து கட்சி சார்பில் எச்.ராஜாவைக் கைது செய்யக்கோரி புகார் மனு அளிக்கப்பட்டது. திராவிடர் கழகம், திமுக, விடு தலை சிறுத்தைகள், காங்கிரஸ், தமிழர் உரிமை இயக்கம், மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த வர்கள் கலந்து கொண்டனர். திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ், துணைச் செயலாளர் கட்பீஸ் கிருஷ்ண மூர்த்தி, நகர தலைவர் சீனி.முத்து, செயலாளர் அரங்க.நாகரெத்தினம், ஒன்றிய தலைவர் ஆர்.டி.வி.இளங்கோவன், மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் அ.சாமிதுரை, இளைஞர்அணி செயலாளர் க.அருள்தாஸ், மாணவர் அணி தலைவர் மூ.முகில்வேந்தன், செயலாளர் மதிவாணன், கலை, சிதம்பரம் அன்பு திராவிடன், தர்மலிங்கம் மற்றும் ஏரா ளமான தோழர்கள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை நகர் முழுவதும் எச்.ராஜா வைக் கண்டித்து அனைத்து கட்சி சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
தருமபுரியில் தணல்!
தருமபுரியில் திராவிடர் கழகம், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மதிமுக, திராவிட இயக்க தமிழர் பேரவை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் இணைந்து எச். ராஜா படத்தை தீயிட்டுக் கொளுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
குமாரபாளையத்தில் குமுறல்
குமாரபாளையத்தில் எச்.ராஜாவைக் கண்டித்து அவ ரது உருவப் பொம்மை எரிப்பு இதில் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பங்கேற்றனர்.
வரிப்புலிகளாய் வடலூரில்
வடலூரில் இன்று (மார்ச் 7) காலை 9 மணியளவில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் எச்.ராஜாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர் கள் பெரும் அளவில் கலந்து கொண்டனர்.
முழங்கியது மதுரை
6.3.2018 அன்று மாலை 6 மணியளவில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் எச்.ராஜாவை கண்டித்து வன்முறையை தூண்டி விடும் இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் தமிழ்நாடு அரசு கைது செய்ய வேண்டும் என்று மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் சாலை மறியல் நடந்தது. திராவிடர் கழகம், திராவிட இயக்க தமிழர் பேரவை பொறுப்பாளர்கள், தோழர்களை காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர்.
கைது செய்யப்பட்ட தோழர்கள் கழக பொறுப்பா ளர்கள் தென்மாவட்ட பிரச்சார குழு தலைவர் தே.எடிசன் ராசா, அமைப்புச் செயலாளர் வே.செல்வம், மதுரை மண்டலத் தலைவர் மா.பவுன்ராசா, மண்டலச் செயலா ளர் நா.முருகேசன், மாவட்ட தலைவர் எஸ்.முனியசாமி, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் த.ம.எரிமலை, திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் தம்பி பிரபு, அமர்நாத், போட்டோ சரவணன், திராவிடர் கழக தோழர் கள் சார்பில் வழக்குரைஞர்கள் நா.கணேசன், சித்தார்த்தன், சிவகுருநாதன், இளங்கோ, மாரி, க.பிச்சைப்பாண்டி, இரா.சுரேசு, சிவா, புதூர் பாக்கியம், ராசேந்திரன், விடு தலை ராசா, முத்தையா, பேக்கரி கண்ணன், கணேசன், பவுன்ராசா, சடகோபன், மணிராஜ், பாண்டி உள்ளிட்ட தோழர்கள் கைது செய்து இரவு 10 மணியளவில் விடு தலை செய்தனர்.
தஞ்சாவூர்
எச்.ராஜாவைக் கண்டித்து தஞ்சை மற்றும் உரத்த நாட்டில் திராவிடர் கழகம், திமுக, மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், காங்கிரஸ், திராவிட இயக்க தமிழர் பேரவை தோழர்கள் பெருமளவில் கலந்து கொண்டு போராட்டம் நடத்தினர்.