Home » சட்டம் & அரசியல் » மீண்டும் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது: பேரறிஞர் அண்ணாவின் அன்றைய ஆதங்கம் இன்றும் தொடர்கிறது.

மீண்டும் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது: பேரறிஞர் அண்ணாவின் அன்றைய ஆதங்கம் இன்றும் தொடர்கிறது.

தென்மாநிலங்களில் இருந்து கிடைக்கும் அபரீதமான வருவாயை வடக்கில் செலவு செய்து வருகிறது என்று ஆந்திர முதலவர் சந்திரபாபு நாயுடு மத்திய பாஜக அரசின் மீது கடுமையான கண்டங்களைத் தெரிவித்துள்ளார்.

👤 Saravana Rajendran13 March 2018 4:09 PM GMT
மீண்டும்  வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது: பேரறிஞர் அண்ணாவின் அன்றைய ஆதங்கம் இன்றும் தொடர்கிறது.
Share Post

ஆந்திர மாநிலம் சட்டமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும் ஆந்திராவிற்கான நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது, " நமது மாநிலப் பிரிவினையின் போது மாநிலத்திற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்ற மறுக்கிறது. தொடர்ந்து ஆந்திர மாநிலம் புறக்கணிக்கப்படுகிறது. பொதுவாகவே மத்திய அரசுக்கு அதிகமான அளவு வருவாயை கொடுக்கும் மாநிலங்களாக தென் இந்திய மாநிலங்கள் உள்ளது, ஆனால் அவ்வாறு கிடைக்கும் வருவாயானது வடமாநிலங்களின் வளர்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
ஆந்திரா இந்தியாவி ஒரு பகுதி தானே? பிறகு ஏன் இந்த பாகுபாடு காட்டப்படுகிறது? தொழில்துறை வரி சலுகைகள் மற்றும் ஜிஎஸ்டி வரி பிற மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் நிலையில், ஆந்திராவிற்கு மட்டும் வழங்கப்படாமல் மத்திய அரசு மவுணம் காக்கிறது.
வரி வருவாயில் மத்திய அரசின் பணம் மற்றும் மாநில அரசின் பணம் என்றெல்லாம் கிடையாது. வருமானம் அனைத்தும் இந்திய மக்களுடையது. மக்களின் உணர்ச்சிகராமான கோரிக்கைகளுக்கு எல்லாம் சிறப்பு தகுதி வழங்க முடியாது என அருண் ஜெட்லி கூறுகிறார். மக்களின் உணர்வு மிகுந்த போராட்டத்தின் அடிப்படையில் மாநிலத்தை பிரிக்க முடியும்போது, அதே உணர்வுகளின் அடிப்படையில் ஏன் சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாதா?
மத்திய அரசு தருவதாக வாக்குறுதி அளித்த நிதியை மட்டுமே நாங்கள் கேட்கிறோம், கூடுதலாக எதுவும் கேட்கவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
"வடக்கு வாழ்கிறது....... தெற்கு தேய்கிறது.....இந்த வாசகம் பேரறிஞர் அண்ணாவால் தென்னகத்திற்கு மத்திய அரசு இழைத்த துரோகம் குறித்து கூறப்பட்டது.
அக்காலத்தில் கூறப்பட்ட இக்கூற்று நூற்றுக்கு நூறு இது ஒரு தீர்க்கதரிசனமாக தான் இருக்க வேண்டும் . அன்றிலும் சரி , அடிப்படை உரிமைகளை பெறுவதிலும் மற்ற வளங்களை அனுபவிப்பதிலும் இருந்து தமிழகத்தை புறந்தள்ள மத்தியில் ஆளும் அரசு அவ்வப்போது வரிந்துகட்டிக்கொண்டு இருக்கிறது.
கேட்பதற்கு வேடிக்கையாய் இருந்தாலும் மேற்கூரியவற்றில் அடங்கி இருக்கும் சூட்சமத்தின் விளைவு எவ்வளவு பயங்கரமானது என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும். சித்தராமையா, பினராயி விஜயன், சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ் போன்ற அனைத்து தென் மாநில முதல்வர்களும் அன்று அண்ணா கூறிய கருத்தை 50 ஆண்டுகளுக்குப் பிறகு வழிமொழிந்துள்ளனர்.
மார்ச் 7 ஆம் தேதி ஆந்திர நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் ரெட்டி தென் மாநிலங்கள் தனி நாடாக மத்திய அரசு வழிவகுக்கவேண்டாம் என்று கூறினார்.
இதையேதான் அறிஞர் அண்ணாவும் நான் தனித்தமிழ் நாட்டுப் பிரிவினையைக் கைவிட்டுவிட்டோம் ஆனால் அந்த கோரிக்கைக்கான் காரணங்கள் உயிர்ப்புடன் தான் இருக்கிறது என்று கூறியதையும் இங்கே குறிப்பிடவேண்டும்.