Home » சட்டம் & அரசியல் » ஜாதி அரசியல் பலன் தராது, தமிழக ஜாதிக்கட்சிகளுக்கு கிடைத்த மரண அடி இப்போது சாமியார் ஆதித்யநாத்திற்கும் கிடைத்ததும்

ஜாதி அரசியல் பலன் தராது, தமிழக ஜாதிக்கட்சிகளுக்கு கிடைத்த மரண அடி இப்போது சாமியார் ஆதித்யநாத்திற்கும் கிடைத்ததும்

உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் சாமியார் ஆதித்யநாத், துணை முதல்வர் மவுரியா ஆகியோர் போட்டியிட்டு வென்ற நாடாளுமன்ற தொகுதிகளின் இடைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தோல்வி அடைந்துள்ளது.

👤 Saravana Rajendran16 March 2018 2:35 AM GMT
ஜாதி அரசியல் பலன் தராது, தமிழக ஜாதிக்கட்சிகளுக்கு கிடைத்த மரண அடி இப்போது சாமியார் ஆதித்யநாத்திற்கும் கிடைத்ததும்
Share Post

. உ.பி.யில் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய கையோடு சுதந்திரத்திற்கு முன்பிருந்த மேல் ஜாதி அரசியல் தலையெடுத்தது. இதை விடுதலை இதழ்களில் அதிகாரிகள், அமைச்சர்கள் பட்டியலோடு ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தது. இந்த உயர்ஜாதி அரசியலும் இவர்களின் தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் சாமியார் ஆதித்யநாத் பதவியேற்றது முதல் விடுதலை நாளிதழில் "அதிகாரிக அமைச்சர்கள், செயலாளர்கள் குறித்து அங்கு நிலவும் மேல் ஜாதி ஆதிக்கம் குறித்து தொடர்ந்து எழுதி வந்தது உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை பண்டிட்டுகள், தாகூர்கள், பிராமணர்கள், கயஸ்தா, காத்ரி, பூமிகார் மேல்ஜாதியினராக கருதுகின்றனர்.
சாமியார் ஆதித்யநாத் அமைச்சரவையில் கேபினெட் தகுதியுள்ள பெரும்பாண்மை அமைச்சர்கள் மேல்ஜாதியினர்தான். மேலே கூறிய மேல்ஜாதியினர் மேலும் பல முக்கிய துறைகளில் அமைச்சர்களில் 25 பேர் உயர்ஜாதியினர். ஒட்டுமொத்த அமைச்சரவையில் இதர பிற்படுத்தப்பட்டோர் 15 பேர்; தாழ்த்தப்பட்டோர் 4; சீக்கியர்-1; முஸ்லிம்- 1; இதில் தாழ்த்தப்பட்ட அமைச்சர்களுக்கு நீண்டகாலமாக நிர்வாகம் ஒதுக்கப்படாமல் உள்ளது. ஒதுக்கப்பட்ட 2 அமைச்சர்களுக்கு இன்றுவரை வீட்டுவசதி இதர உதவியாளர்கள் வசதி செய்துதரப்படவில்லை. இது தொடர்பாக சாமியார் அமைச்சரிடம் கேட்ட போது நிர்வாக மாற்றங்கள் ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறோம் விரைவில் அனைவரும் வீடுகள் கிடைத்துவிடும் என்று கூறினார். (உயர்ஜாதி அமைச்சர்கள் அனைவருக்கும் உடனடியாக வீடும், உதவியாளர்களும் கிடைத்துவிட்டனர்.)
சாமியார் ஆதித்யநாத் ஆட்சி அமைந்த உடன் மேல்ஜாதி டாக்கூர்களுக்குதான் நிர்வாகத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்கள் மீது சமீபகாலமாக டாக்கூர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றனர். சாமியார் அரசு நிர்வாகம் டாக்கூர்கள்பக்கம் நிற்கிறது.
இது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் விடுதலை இதழில் உத்தரப்பிரதேசத்தில் 75 மாவட்ட எஸ்பிக்களில் 13 பேர் டாக்கூர்கள் 20 பேர் பார்ப்பனர்கள் என்பதை பட்டியலிட்டுக் கூறியிருந்தது.
இதில் வெறும் 2 இதர பிற்படுத்தபப்ட்ட அதிகாரிகள் 2 முஸ்லிம்களை மற்றும் இதர உயர்ஜாதி காவல் அடக்கம். சாமியார் ஆட்சியை 'தங்களது பொற்காலம்' திரும்பிவிட்டதாக பார்ப்பனர்களும் உயர்ஜாதியினரும் கொண்டாடி வருகின்றனர் . இந்த மேல்ஜாதிய ஆதிக்கம் இதர பிற்படுத்தப்பட்ட, மக்களை இயல்பாகவே கோபமடைய வைத்துவிட்டது. இது பர்ப்பன, டாக்கூர்களின் அரசுதான்
மக்களவை தேர்தலில், சட்டசபை தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளை அறுவடை செய்தது பாஜக. ஆனால் அப்போது அந்த சமூகத்தினர் அமையப் போவது உயர்ஜாதிமக்களுக்கான அரசு என்பதை உணரவில்லை. இப்போது அப்பட்டமாக இது தாழ்த்தப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் எதிரான அரசாக முழுமையாக மாறி நிற்பதை உணர்ந்துவிட்டார்கள்.
இதனால்தான் பரம எதிரிகளான சமாஜ்வாதிகட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் இயல்பான கூட்டணியாக உருவெடுத்திருக்கிறார்கள்.
ஆம் நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களில் பரந்துபட்ட இந்து வாக்கு வங்கியை உருவாக்கிய பாஜக அதைத் தக்க வைத்துக் கொள்ளவில்லை. தங்களை நோக்கி வந்த இந்து வாக்கு வங்கியை மேல்ஜாதி ஆதிக்க அணுகுமுறையால் பாஜகவே தகர்த்துவிட்டது. ஜாதி அரசியல் என்பது மிகவும் குறுகிய கால ஆபத்தான பலனை அளிக்கும் என்பதை உபி அரசு மீண்டும் உணர்த்திவிட்டது.