Home » சட்டம் & அரசியல் » மீண்டும் உளறித்தள்ளிய ஹர்சவர்தன். அய்ன்ஸ்டீன் கொடுத்ததை விட சிறந்த கோட்பாடு வேதத்தில் உள்ளதாம்

மீண்டும் உளறித்தள்ளிய ஹர்சவர்தன். அய்ன்ஸ்டீன் கொடுத்ததை விட சிறந்த கோட்பாடு வேதத்தில் உள்ளதாம்

பல்கலைக்கழக மாணவர் மத்தியில் பேசிய ஹர்ஷவர்தன் அய்ஸ்டைன் கண்டறிந்ததை விட சிறந்த கோட்பாடு வேதத்தில் உள்ளதாக ஸ்டீபன் ஹாக்கின்ஸ் கூறியதாக உளறித்தள்ளியுள்ளார்.

👤 Saravana Rajendran18 March 2018 12:15 AM GMT
மீண்டும் உளறித்தள்ளிய ஹர்சவர்தன். அய்ன்ஸ்டீன் கொடுத்ததை விட சிறந்த கோட்பாடு வேதத்தில் உள்ளதாம்
Share Post

மணிப்பூரில் உள்ள இம்பால் பல்கலைக் கழகம் சார்பில் 105-வது இந்திய அறிவியல் மாநாடு நடந்தது. இதில் மோடி, மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷ வர்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மோடி மேடையில் பேசி முடித்த பின்னர் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் விழாவில் பேசினார்.
அப்போது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் இன்று வரை ஆகச்சிறந்த கண்டுபிடிப்பாக கருதப்படும் E=mc2 என்ற கோட்பாடை விட வேதத்தில் உள்ள கோட்பாடு மேலும் சிறந்தது என்றார்.சமீபத்தில் நாம் ஒரு சிறந்த விஞ்ஞானி, அண்டவெளி ஆய்வாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கை இழந்துவிட்டோம். அவர் ஐன்ஸ்டீனின் E = mc2 கோட்பாட்டை விட வேதத்தில் உள்ள கோட்பாடு மேலும் சிறந்தது என்று ஆதாரத்துடன் பதிவுசெய்துள்ளதாக ஹர்ஷ் வர்தன் பேசினார்.
கண், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவரான ஹர்ஷ் வர்தன் கூறிய இந்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. ஹர்ஷ் வர்தனிடம் செய்தியாளர்கள் வேதத்தில் சிறந்த கோட்பாடு இருப்பதாக ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதற்கான ஆதாரத்தை கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு எந்த ஆதாரத்தையும் கொடுக்காமல் ஊடகத்துறையினரான நீங்களே உழைத்து கண்டுபிடியுங்கள்,
உங்களால் முடியாது எனும் போது நான் ஆதாரத்தை தருகிறேன் என்று சமாளித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து உண்மையிலேயே ஸ்டீபன் ஹாக்கிங் வேதத்தில் சிறந்த கோட்பாடு இருக்கிறது என்று கூறி இருக்கிறாரா என்று தீவிர தேடுதல் நடத்தியுள்ளன மீடியாக்கள். ஆனால் அவருடைய ஆய்வுகள் என எதிலுமே அவ்வாறு குறிப்பிடப்படவில்லை.
ஸ்டீபன் ஹாக்கிங்+வேதாஸ் என்று கூகிலில் பார்த்தால், அதில் முதல் லிங்க் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயிண்டிபிக் ரிசர்ச் ஆன் வேதாஸ் என்ற இணையப்பக்கம் முதலில் வருகிறது. அதில் இந்த அமைப்பின் செயலர் சிவராம் பாபு என்பவர் 2011ல் செய்யப்பட்ட பதிவு ஒன்று உள்ளது, அவர் ஐன்ஸ்டின் கோட்பாட்டை விட வேதத்தில் சிறந்த கோட்பாடு இருக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது காவிக்கும்பல்கள் அவர்களாகவே கதை எழுதியுள்ளனர்
மறைந்த வாணியல் இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் கடவுள் மறுப்பாளர் மற்றும் மூடநம்பிக்கை மறுப்பாளர் இதை அவர் பல்வேறு காலகட்டங்களில் கூறியுள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதாக இந்திய அறிவியல் மாநாட்டில் கூறி இருக்கும் விஷயம் ஆதாரமற்ற கூற்றாகவே பார்க்கப்படுகிறது. இந்துத்துவ அரசியல் சித்தாந்தம் கொண்ட இவர்கள் இது போன்று கூறுவது முதல் முறை அல்ல, ஏற்கனவே இவர்களின் தலைவராக உள்ள மோடி வினாயகருக்கு யாணைத் தலையைப் பொறுத்தியது தான் உலகின் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி என்றும், குந்தி தேவி தான் உலகின் முதல் டெஸ்ட் டுயூப் குழந்தை பெற்றவர் என்று 2015-ஆம் ஆண்டு மும்பையில் உள்ள தீருபாய் அம்பானியின் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவப் பிரிவை திறந்துவைக்கும் போது கூறியிருந்தார். இதே ஹர்ஷவர்தன் 2015-ஆம் ஆண்டு டில்லியில் கல்வியாளர் மாநாடு ஒன்றில் பேசும் போது நமது காமசூத்திரம் என்னும் நூலிலேயே பாலியல் கல்வி உள்ளது எனக்கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார்.
காமசூத்திரம் இந்தியாவில் அறிவுப்புரட்சி பரவி இருக்கும் வேலையில் மக்களை முட்டாள்களாக்கி அவர்களை பாலியல் ரீதியில் அடிமைகளாக்கும் நூல் என்று பல கல்வியாளர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது