Home » சட்டம் & அரசியல் » காவியை மறைத்து கல்வி என்று என்று கூறிய தமிழிசை

காவியை மறைத்து கல்வி என்று என்று கூறிய தமிழிசை

தமிழகத்தின் பல்கலைக்கழகங்களை தொடர்ந்து இந்துத்துவமயமாக்கும் முயற்சியில் மத்திய பாஜக முயல்கிறது இதை மறைக்கும் விதமாக காவி என்பதை மறைத்து கல்வி என்று மாற்றிக்கூறிச் சமாளிக்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்

👤 Saravana Rajendran6 April 2018 5:22 AM GMT
காவியை மறைத்து கல்வி என்று என்று கூறிய தமிழிசை
Share Post

தமிழகத்தின் பல்கலைக்கழகங்களில் தொடர்ந்து இந்துத்துவ சிந்தனைகொண்டவர்களை ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களை துணைவேந்தர்களாக நியமித்து வருகின்றனர். இதனை தமிழகத்தின் அனைத்து எதிர்கட்சியினரும் எதிர்த்தும் எதிர்ப்பை கண்டுகொள்ளாத மத்திய அரசு ஆளுநர் துணையுடன் இந்த நியமனங்களை செய்துவருகிறார்.
இது தொடர்பாக சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது, :"மாற்றம் தேவையான நிலையில் தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்கிறார்கள். காவிரி விவகாரத்தில் நிச்சயமாக தமிழக உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும் அதில் மாற்றுக்கருத்து இல்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் திமுகவால் மறுக்கப்பட்ட காவிரி பாஜக ஆட்சியில் தான் பாய்ந்தோடப் போகிறது. அதற்கு சில நாட்கள் அவகாசம் வேண்டும். எது எப்படி இருந்தாலும் தமிழக உரிமை மீட்டெடுக்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் குழு, புதிய துணைவேந்தர் நியமனத்தை வரவேற்றுள்ளனர். திறமைகளின் அடிப்படையில் மட்டுமே நியமனம் செய்யப்படுகின்றனர். பல்கலைக்கழகத்தில் அரசியலை புகுத்தாதீர்கள். பல்கலைக்கழகத்தை காவிமயமாக்கவில்லை; கல்விமயமாக்கவே முயல்கிறோம். என்று கூறியுள்ளார்.
தமிழகத்திற்கு புரோகிதம் செய்யவந்த ஆளுநர் பன்வர்லால் புரோகித் அவருக்கு மோடி கொடுத்த அசைமெண்டான தமிழகத்தை விரைவில் காவியமாக்கவேண்டும் என்பதை தலைமேல் கொண்ட கடமையாக ஏற்று விரைந்து செய்துகொண்டு இருக்கிறார். இது தெளிவாக தெரிந்த நிலையில் காவிமயம் என்பதை வாய் குளறில் கல்விமயம் என்று கூறுகிறார்