Home » சட்டம் & அரசியல் » நீர்வளத்துறை அமைச்சர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தியவர்கள் கைது

நீர்வளத்துறை அமைச்சர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தியவர்கள் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி டெல்லியில் நீர்வளத்துறை அமைச்சகம் முன்பு தமிழகக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அம்மாணவர்களை டெல்லி காவல்துறையினர் செய்துள்ளனர்.

👤 Saravana Rajendran7 April 2018 12:12 AM GMT
Share Post

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. ஆறாவது நாளாக இன்றும் மாநிலத்தின் பல இடங்களில் சாலை மறியல், ஆர்ப்பாட்டங்கள், ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் முன்பு தமிழகக் கல்லூரி மாணவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு போராடிய மாணவர்களை அனுமதியினறி தடைசெய்யப்பட்ட பகுதியில் போராட்டம் நடத்தினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்துள்ளனர்.