Home » சட்டம் & அரசியல் » தேர்தல் சூடு பிடித்த மலேசியா. நாடாளுமன்றம் கலைப்பு

தேர்தல் சூடு பிடித்த மலேசியா. நாடாளுமன்றம் கலைப்பு

மலேசியாவில் ஜூன் மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

👤 Saravana Rajendran7 April 2018 12:13 AM GMT
தேர்தல் சூடு பிடித்த மலேசியா. நாடாளுமன்றம் கலைப்பு
Share Post

மலேசிய நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பேசிய பிரதமர் நஜிப் ரஸக் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மலேசியாவின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது, ஆகவே விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது, மலேசியாவின் 14-ஆவது பொதுத் தேர்தல் ஜூன் மாதம் நடைபெற உள்ளதால் அங்கு நடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது, இது தொடர்பாக பிரதமர் நஜின் தொலைக்காட்சியில் உரையாற்றியபோது அது குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
மேலும் அவர் தனது ஆட்சியில் மலேசியாவில் நடந்த ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தின் சாதனைகளைப் பெருமிதத்துடன் அவர் பட்டியலிட்டார். வரும் பொது தேர்தலில், சுமார் 14.9 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதி பெறுவர். ஆளும் தேசிய முன்னணிக் கூட்டணி நாளை மாலை தனது தேர்தல் அறிக்கையை வெளியிடும். உலகில் நேர்மையான தேர்தல் நடைபெறும் நாடுகள் பட்டியலில் மலேசியா, சிங்கபூர், உள்ளிட்ட பல அய்ரோப்பிய நாடுகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.