அய்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில், இரண்டாண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது. காவிரி பிரச்னைக்காக போராட்டம் நடத்தி வரும் அரசியல் கட்சிகள், அமைப்புகள், சென்னையில் அய்பிஎல் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்தன.
அதையடுத்து சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும், அண்ணா சாலையிலும் பல்வேறு அமைப்புகள், கட்சிகள் போராட்டங்களை நடத்தின. இந்த எதிர்ப்புகளுக்கு இடையே சிஎஸ்கே, கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த நிலையில், மைதானத்தில் சிலர் செருப்புகளை வீிசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து சிலர் செல்போன் டார்ச் அடித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தொடர்ந்து பதற்றம் நீடித்தது.