சென்னையில் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்கவும் போராட்டக்களமான இந்த நேரத்தில் அய்பிஎல் கிரிக்கெட் விளையாடவேண்டாம் என்று கூறி சென்னையில் போராட்டம் நடைபெற்றது,
இந்த போராட்டத்தின் போது பாரதிராஜா, சீமான், உட்பட பலர் கைதானார்கள். கைதுசெய்யப்பட்ட இவர்கள் அனைவரும் காலை விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட பிறகு சென்னையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய சீமான் கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் காவிரி தமிழகத்தில் பாய்ந்தோடும் என்கிறார்கள். ஆனால் பாஜக ஆட்சியின்போதும் தமிழகத்திற்கு முறையாக நீர் திறக்கவில்லை. தமிழ்நாட்டிற்கென கொடி கொண்டுவந்தது தேசிய விரோதமல்ல. கர்நாடகத்தில் தனிக்கொடி மூலம் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதுபோல் அய்பிஎல் , காவிரி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சென்னையில் வரும் 20-ஆம் தேதி அய்பிஎல் போட்டிகள் நடத்தப்படாது. மீறி நடத்தினால் எங்களது போராட்டங்கள் வேறு மாதிரி இருக்கும் என்றார் சீமான். மேலும் ரஜினிக்கு சரமாரி கேள்விகளை முன்வைத்தார்.