Home » சட்டம் & அரசியல் » மதவெறி பாஜக மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலிலும் இஸ்லாமிய மற்றும் இதர சிறுபான்மையினருக்கு வாய்ப்பில்லை.

மதவெறி பாஜக மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலிலும் இஸ்லாமிய மற்றும் இதர சிறுபான்மையினருக்கு வாய்ப்பில்லை.

கர்நாடகாவில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக கட்சியின் மூன்றாம் வேட்பாளர் பட்டியலில் வெளியாகி உள்ளது.

👤 Saravana Rajendran21 April 2018 12:18 AM GMT
மதவெறி பாஜக மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலிலும் இஸ்லாமிய மற்றும் இதர சிறுபான்மையினருக்கு வாய்ப்பில்லை.
Share Post

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்காக பாஜக வெளியிட்டு இருக்கும் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் ஒரு முஸ்லிம் பெயர் கூட இடம்பெறவில்லை. அதேபோல் இரண்டிலும் கிறிஸ்துவர்கள் பெயரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில் கர்நாடகா தேர்தலுக்காக பாஜக மூன்று கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக 72 பேர் கொண்ட பட்டியல் வெளியானது. அதன்பின் 82 பேர் கொண்ட 2வது பட்டியலை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் தற்போது பாஜக கட்சியின் மூன்றாம் வேட்பாளர் பட்டியலில் வெளியாகி உள்ளது. 59 பேர் கொண்ட 3ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இன்னும் 13 இடங்களுக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. பாஜகவை சேர்ந்த கோபால ராவ் சாமுண்டேஸ்வரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சித்தராமையாவை எதிர்த்து போட்டியிட உள்ளார். இதில் எடியூரப்பாவின் மகன் ராகேவேந்திராவிற்கு இன்னும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்கு வருணா தொகுதியில் வாய்ப்பு அழைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.