Home » சட்டம் & அரசியல் » பா.ஜ.க. என்றால் பச்சைப் பாசிசமே!

பா.ஜ.க. என்றால் பச்சைப் பாசிசமே!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்முறை செய்யப்பட்டு, கொலை...

👤 Saravana Rajendran24 April 2018 3:23 PM GMT
பா.ஜ.க. என்றால் பச்சைப் பாசிசமே!
Share Post

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்முறை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. சிறுமி கொலையில் குற்றவாளிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் பா.ஜ.க. அமைச்சர்கள் மற்றும் நிர் வாகிகள் பங்கேற்றது - குற்றவாளிகளுக்கு எதிராக காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த போது பா.ஜ.க. ஆதரவு வழக்குரைஞர்கள் போராட்டம் மேற் கொண்டது - பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விசா ரணையில் ஈடுபட்ட அதிகாரிகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளானார்கள்.
இவ்வழக்கில் மிகவும் தீவிரமாகவும், உன்னிப்பாகவும் செயல்பட்ட காவல்துறையின் பெண் அதிகாரி ஸ்வேதம் பரி சர்மா, குற்றவாளிகளை அடையாளம் காணுவதில் இருந்து, அவர்களை சிறையில் அடைப்பது வரையில் சிறப்புப் புலனாய்வுப் பிரிவில் சிறப்பாக செயல்பட்டவர் ஆவார். விசாரணையின் போது அவர் எதிர்கொண்ட பிரச் சினைகள் தொடர்பாக ஆங்கில ஊடகத்தில் பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:
செய்தியாளர்:- இந்த வழக்கை நீங்கள் வெளிக் கொண்டு வந்து உள்ளீர்கள், குற்றவாளிகள் சிறையில் உள்ளார்கள். ஆனால் நீங்கள் தொடர்ந்து இலக்காக் கப்பட்டு வருகிறீர்கள். இது உங்களை எப்படி பாதிக்கிறது?
ஸ்வேதாம்பரி:- 21-ஆம் நூற்றாண்டிலும் பாலியல் வன்முறை போன்ற சம்பவங்கள் நடைபெறுவது உண்மையில் மிகவும் வெட்கக்கேடானது. பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் என்பதுதான் பிரதமர் மோடியின் முழக்கமாக உள்ளது, ஆனால் படித்த பெண், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதிக்காகப் போராடும்போது அவமதிக்கிறார்கள். என்னுடைய தீர்மானத்தில் நான் உறுதியாக இருக்கிறேன், நீதித்துறையின்மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.
செய்தியாளர்: வழக்கில் உண்மையை வெளிக் கொண்டு வருவது எவ்வளவு கடினமானதாக இருந்தது?
ஸ்வேதாம்பரி:-இதுபோன்ற வழக்குகளில் ஒருநபரால் மட்டும் உண்மையை வெளிக்கொண்டு வருவது என்பது கிடையாது. எங்களுடைய டிஜிபி எஸ்.பி. வாயித் முக்கிய மான பணியை மேற்கொண்டார். சிறப்புப் புலனாய்வுப் பிரிவின்மீது நம்பிக்கை கொண்டு இருந்தார். எங்களுடைய டிஎஸ்பியின் வழிகாட்டுதலின்படி செயல் பட்டோம். எங்களுடைய குழுவில் 6 பேர் இடம்பெற்று இருந்தோம். எஸ்எஸ்பி கண்காணித்தார். இந்த வழக்கைத் தீர்ப்பதில் ஜம்மு காஷ்மீர் குற்றப்பிரிவு இரவு, பகலாகப் பணியாற்றியது. நாங்கள் சம்பவம் தொடர்பாக ஆதாரங்களை சேகரிக்கச் சென்ற போது தாக்குதலுக்கு உள்ளானோம். நாங்கள் இந்த வழக்கில் 72 நாட்களில் குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல் செய்தோம். நாங்கள் ஒவ்வொரு நாளும் பிரச்சினையை எதிர்கொண்டோம். பாலியல் வன்முறை குற்றவாளிகளை காப்பாற்ற இந்திய தேசியக்கொடியை அசைத்தது என்னை ஓர் அதிகாரியாக மிகவும் வேதனையடையச் செய்தது. மக்கள் எங்களுடன் பேசுவதற்கு அச்சப் பட்டார்கள். அவர்களை தைரியப்படுத்த முயற்சி செய்தோம், குற்றம் செய்யாதவர்கள் பயப்பட தேவை யில்லை என அவர்களுக்கு ஊக்கமளித்தோம். செய்தியாளர்:- இந்த வழக்கு எவ்வளவு பாதுகாப்பாக உள்ளது? ஸ்வேதாம்பரி:- எங்களுடைய முதல்கட்ட குற்றப் பத்திரிக்கை தயாராகிவிட்டது, துணை குற்றப்பத்திரிக்கை ஒன்று நிலுவையில் உள்ளது. எங்களுடைய வழக்கு மிகவும் உறுதியாக உள்ளது. வாக்குமூலங்கள் அடிப் படையில் மட்டும் கிடையாது, அறிவியல் சான்றுகளால் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. செய்தியாளர்:- இந்த வழக்கில் சிலர் மத சம்பந்தமான விஷயங்களையும் வெளியிடுகிறார்கள். இது உங்களை எப்படி உணரச்செய்கிறது?
ஸ்வேதாம்பரி:- நான் டோக்ரா வம்சத்தை சார்ந்தவள். எல்லா மகளும் எல்லோருக்கும் மகள்தான் என்று சொல்வோம். நாங்கள் எல்லா மதங்களையும் சார்ந்தவர்கள். சிறுமியின் மதநம்பிக்கை பற்றி நான் எதையும் கருத்தில் கொள்ளவில்லை. முதலில் மனிதராக இருப்போம், பின்னர் இந்துவா அல்லது இஸ்லாமியரா என்பது பற்றி யோசிப்போம் என்று கூறியுள்ளார். காவல்துறை அதிகாரியின் மேற்கண்ட கருத்துக்களும், தகவல்களும் பிஜேபி கூட்டணி ஆளும் ஜம்மு காஷ்மீரின் நிலையைப் பட்டவர்த்தனமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
பாலியல் வன்முறைக் கும்பலுக்குத் தேசியக் கொடி அசைத்து மரியாதையாம்! இதைவிடத் தேசியக் கொடியை எப்படிதான் அவமதிக்க முடியும்?
பச்சைப் பாசிசத்தின் மறுபெயரே பா.ஜ.க. - இந்துத்துவா எச்சரிக்கை.
இந்தச் சூழலில் துணிவாகச் செயல்படும் காவல்துறை அதிகாரிகள் பாராட்டுக்குரியவர்களே!