Home » சட்டம் & அரசியல் » பெண்களுக்கு எதிரான குற்றம் பற்றி பிரதமர் மோடிக்கு கவலை இல்லை' : ராகுல் குற்றச்சாட்டு

பெண்களுக்கு எதிரான குற்றம் பற்றி பிரதமர் மோடிக்கு கவலை இல்லை' : ராகுல் குற்றச்சாட்டு

''நாட்டில், பெண்கள் பாலியல் வன்முறை செய்யப்பட்டாலும், தலித்துகள் மிரட்டப்பட்டாலும், அது பற்றி,...

👤 Saravana Rajendran24 April 2018 3:46 PM GMT
பெண்களுக்கு எதிரான குற்றம் பற்றி பிரதமர் மோடிக்கு கவலை இல்லை : ராகுல் குற்றச்சாட்டு
Share Post

''நாட்டில், பெண்கள் பாலியல் வன்முறை செய்யப்பட்டாலும், தலித்துகள் மிரட்டப்பட்டாலும், அது பற்றி, பிரதமர், நரேந்திர மோடிக்கு கவலை இல்லை; மீண்டும் பிரதமர் பதவியை அடைய வேண்டும் என்பது மட்டுமே, அவரது விருப்பம்,'' என, காங்கிரஸ் தலைவர், ராகுல் கூறியுள்ளார்.
டில்லியில் நேற்று 25.4.2018 'அரச மைப்பு சட்டத்தை காப்போம்' என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சாரத் திட் டத்தை, காங்கிரஸ் தலைவர், ராகுல் துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறிய தாவது: நாடு, பற்றி எரிந்தாலும், பெண்கள் பாலியல் வன்முறை செய்யப்பட்டாலும், தாழ்த்தப்பட்டோர் தொடர்ச்சியாக மிரட்டப்பட்டாலும், அது பற்றி, பிரதமர் நரேந்திர மோடி கவலைப்படுவதாக தெரியவில்லை. மீண்டும் பிரதமர் பதவியை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்பதில் தான், மோடி உறுதியாக உள்ளார்.மோடியின் ஆட்சியில், அரசமைப்புச் சட்ட மாண்புகள் அபாய கட்டத்தில் உள்ளன. இந்த நிலை தொடர் வதை, காங்., ஒருபோதும் அனுமதிக்காது. உச்ச நீதிமன்றத்தை இயங்க விடாமல், மத்திய அரசு தடுக்கிறது.
நாடாளுமன்றத்தை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நீரவ் மோடி ஊழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங் களை நான், 15 நிமிடங்கள் பேசினால் போதும்; பிரதமர் மோடி, அங்கிருந்து உடனே ஓட்டம் பிடிப்பார். ஆர்.எஸ்.எஸ்., கொள்கையில் முழு நம்பிக்கை உள்ள நபர்களால், மத்திய அரசின் கீழ் உள்ள அமைப்புகள் நிரப்பப்பட்டு வருகின்றன. கடந்த தேர்தலின்போது, வேலை வாய்ப்பு உட்பட பல்வேறு வாக்குறுதிகளை, பிரதமர் மோடி அள்ளி வீசினார். அவை எதையும், அவரால் நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலை யில், அடுத்த தேர்தலில், மேலும் புதிய பல வாக்குறுதிகளை, அவர் அள்ளி வீசு வார்.இவ்வாறு அவர் கூறினார்.