Home » சட்டம் & அரசியல் » அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க முடியாது'

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க முடியாது'

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரிய அதிமுக-வின் கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

👤 Saravana Rajendran25 April 2018 5:29 PM GMT
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க முடியாது
Share Post

222 தொகுதிகளை கொண்ட கர்நாடகா சட்டப்பேரவைக்கு வரும் மே 12 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 15-ம் தேதி எண்ணப்பட்டு அன்றையே தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 17 ஆம் தேதி முதல் தொடங்கியது.
இத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ், பாஜக மற்றும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய பிரதான கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.
சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்புகளில் யாருக்கும் தனிப் பெரும்பாண்மை கிடைக்காமல், அங்கு தொங்கு சட்டசபை உருவாகும் என்று தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்ததேர்தலில், அதிமுகவும் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தது.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பெங்களூருவில் உள்ள காந்திநகர் மற்றும் கோலார் தங்கவயல் ஆகிய இரு தொகுதிகளில் அதிமுக சார்பாக வேட்பாளர்களை நிறுத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது. அங்கு போட்டியிட விரும்புவர்கள் கட்சி தலைமையிடம் விருப்ப மனு அளிக்கலாம் என்றும் தெரிவித்திருந்தது. இதனால், கர்நாடகா மாநில அதிமுக தொண்டர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.
இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க, அதிமுக சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் தமிழகம், புதுச்சேரியில் மட்டுமே அதிமுக அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி, கர்நாடகாவில் அங்கீகரிக்கப்படவில்லை எனக்கூறி அந்தக் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
இந்த 2 தொகுதிகளிலும், 1990 ஆண்டு தேர்தலைத் தவிர இதுவரை நடைபெற்ற அனைத்து சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் அதிமுக வேட்பாளர்கள் தோல்வியை தழுவி டெபாசிட்டை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.