Home » சட்டம் & அரசியல் » சிறுமியைபாலியல் வன்கொடுமை செய்த சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை

சிறுமியைபாலியல் வன்கொடுமை செய்த சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

👤 Saravana Rajendran25 April 2018 5:32 PM GMT
சிறுமியைபாலியல் வன்கொடுமை செய்த சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை
Share Post

மத்தியப்பிரதேச மாநிலம் சிந்த்வாரா பகுதியில் ஆசிரமம் நடத்தி வருபவர் சாமியார் ஆசாராம் பாபு. அவரது ஆசிரமத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் படித்து வந்தார்.
இந்நிலையில், சாமியார் தன்னை பாலியல் பலாத்கரம் செய்ததாக 2013-ல் சிறுமி புகார் செய்தார். இதையடுத்து ஆசாராம் இந்தூரில் கைது செய்யப்பட்டு ஜோத்பூருக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்த வழக்கை எஸ்சி, எஸ்டி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. விசாரணை ஏப்ரல் 7-ம் தேதி நிறைவடைந்த நிலையில் இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட்டது.
அப்போது, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் உள்ளிட்ட 5 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவரது கூட்டாளிகள் நான்கு பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக, ஆசாராம் பாபு அடைக்கப்பட்டிருந்த ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிறைக்கே சென்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
ஆசாராம் பாபு வழக்கு தொடர்பான தீர்ப்பு வெளியானதையொட்டி, ஜோத்பூர் நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பைத் தொடர்ந்து வன்முறைகளைத் தவிர்க்க சிறை வளாகத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
2013 ஆம் கைது செய்யப்பட்ட ஆசாராம், கடந்த 56 மாதங்களாக சிறையில் உள்ளார்.