Home » சட்டம் & அரசியல் » பல்வேறு ஏடுகளில் பச்சையான படப்பிடிப்பு

பல்வேறு ஏடுகளில் பச்சையான படப்பிடிப்பு

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இறுதிக் கட்டத்தில் சுடர்விட்டு எரியும் விளக்கின் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது

👤 Saravana Rajendran26 April 2018 2:04 PM GMT
Share Post

ராஷ்ட்ரிய சுயம் சேவக் என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நேரடி அரசியலுக்குள் வரமாட்டேன் என்று இந்திய உள்துறை அமைச்சகத்திடம் எழுதிக் கொடுத்த பிறகுதான் சர்தார்வல்லபாய் படேல் அதன் மீதான தடையை நீக்கினார். அன்றிலிருந்து இன்றுவரை ஆர். எஸ்.எஸ். அரசியலில் ஈடுபடவில்லை. ஆனால் அதன் கொள்கைத் திணிப்புகளை அரசியல் நீரோடையில் கலக்கவேண்டுமென்றால், இந்திய அரசியலை காவிமய மாக்கவேண்டுமென்றால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அரசியலிலும், தலைமைப் பதவிகளிலும் இருக்க வேண்டும். முக்கியமாக திட்டங்களை வகுப்பவர்களாக வும், அதை நடைமுறைப்படுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும். இதற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் உரு வாக்கப்பட்டதுதான் பாரதீய ஜனதா கட்சி. அக்கட்சி முழுப்பலத்துடன் ஆட்சியில் அமர்ந்துள்ளதால் அனைத்து மட்டத்திலும் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகள் வலிந்து திணிக்கப்பட்டு வருகின்றன.
சங்பரிவார் அமைப்பு மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு அமைப்பாகும். அதிகாரப்பூர்வமாக அது பல்வேறு தளங்களில் 36 துணை அமைப்புகளைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட இணை அமைப்புகளும், தொடர்பில் மட்டும் உள்ள - ஆனால் கட்டளைக்குக் கட்டுப்படும் பிற அமைப்புகளும் ஏராளம் உள்ளன. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொழிலாளர் நல அமைப்பான பாரதிய மஸ்தூர் சங் அவ்வப்போது மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்துவருவது போல் தெரியும். ஒரு தாய் அமைப்பு துணை அமைப்பை தட்டிக்கொடுப்பது தட்டிக்கேட்பதற்காக அல்ல என்ப தைப் புரிந்துகொள்ளவேண்டும். நரேந்திரமோடி ஆட் சிப் பொறுப்பிற்கு வந்ததே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒரு தந்திர வழிமுறைதான். பாஜகவை ஆட்சிக்கட்டில் வரைக் கொண்டுவர பெரும்பாடுபட்டவர் எல்.கே.அத்வானி. ஆனால் அந்த அத்வானியை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சுத்தமாக ஒதுக்கி வைத்துவிட்டது. மேலும் அரசியல் நடவடிக்கையில் அவர் தலையிடாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு மோடி அத்வானியை பொதுமேடைகளிலேயே அவமானப்படுத்துகிறார்.
ஆர்.எஸ்.எஸ். சீர்திருத்தத்தை ஆதரிக்காது ஆர்.எஸ்.எஸ். என்பது கடுமையான பழைமைவாத கருத்துக்களைப் பின்பற்றும் ஒரு அமைப்பு ஆகும். இந்த அமைப்பில் மாற்றமோ அல்லது சீர்திருத்தமோ கொண்டுவரவே முடியாது, சீர்திருத் தம் என்பது பகுத்தறிவுக் கருத்துக் களை உள்ளடக்கியதாகும். ஆனால் மதக்கொள்கைகளை முதுகெலும் பாகக் கொண்ட ஒரு அமைப்பு எப்படி சீர்திருத்தத்தை ஏற்றுக் கொள்ளும் என்பது பெரிய கேள்வி யாக உள்ளது. அங்கு சீர்திருத்தத்தை எதிர்ப் பார்ப்பவர்கள் விரட்டியடிக்கப்படு வார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக கோவா மாநில ஆர்.எஸ்.எஸ். பிர முகர் சுபாஸ் வலிங்கரைக் கூறலாம். கடந்த ஆண்டு நடைபெற்ற கோவா தேர்தலுக்கு முன்பு பாஜக குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் மாநிலத்தில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். உறவு சீர் கெடத்தொடங்கியது. தேர்தல் காலமாகையால் இந்த சிக்கல் தேர்தலில் எதிரொலிக்கும். இதனைக் கருத்தில் கொண்ட ஆர்.எஸ்.எஸ். தலைமை கோவா மாநில ஆர்.எஸ்.எஸ். தலைவரை நீக்கியது. அதாவது ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சீர்திருத்தம், புதிய கருத்துக்கள் எதுவுமே கூடாது என்பதுதான் அவர்களுடைய முதன் மையான கொள்கை. ஆனால் மிகவும் தாமதமான இந்த முடிவால் கோவாவில் பாஜக தோல்வியைச் சந்தித்தது, இருப்பினும் பணத்தால் சில சுயேட்சை சட்டமன்ற உறுப் பினர்களை விலைக்குவாங்கி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரான மனோகர் பாரிக்கர் பதவி விலகி மாநில முதல்வர் பதவிக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பினும் கோவாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சில விதிமுறைகளை தளர்த்தியுள்ளது. அதாவது எல்லா மாநிலங்களிலும் தாய்மொழிக்கல்வியே முக்கியம் என்று முழங்கிவரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கோவாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆங்கிலத்திற்கு முதலி டம் என்ற விதிமுறையில் தலையிடுவதில்லை. இங்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வாக்குவங்கி விபரீத விளை யாட்டில் இறங்கியுள்ளது. கோவாவில் பெரும்பான்மை கிறிஸ்தவர்கள் உள்ளனர். இங்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டியிருப்பதால் அங்கு பாஜக அரசின் முடிவுகளில் அதிகம் தலையிடுவதில்லை.
அதே போல் வடகிழக்கிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மாட்டிறைச்சி விவகாரத்தில் மவுனமாகத்தான் உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் அதிக அளவு கிறிஸ்தவ மக்கள் உள்ளனர். மேலும் அங்கு முக்கிய உணவே மாட் டிறைச்சிதான். அங்கு இந்துத்துவ கொள்கை மற்றும் மாட்டிறைச்சி தடைபோன்ற முழக்கங்களை ஆர்.எஸ்.எஸ். எழுப்புமாயின் அங்கு அதன் ஆணிவேரே ஆட்டம் கண்டுவிடும். ஆகையால் அங்கு மவுனம் காக்கிறது, இது கள்ளமவுனம் ஆகும். காரணம் அங்கு பாஜக ஆட்சியில் அமர்ந்த பிறகு பல விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்துவிட்டன. இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தந்திர உத்திகளைக் கையாண்டு பாஜக மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு அங்கு தன்னுடைய கொள்கைகளை திணித்துவிடும் என்பது தெரியவருகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அரசியலில் இல்லாதது போல் தோன்றினாலும் தற்போது அரசியல் கட்சியாக ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்துள்ள பாஜகவின் ஆணி வேர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பாகும். பாஜகவில் உள்ள அடிமட்டதொண்டர்கள் முதல் மேல்மட்ட தலைவர்கள் வரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர கொள்கை பரப்புநர்கள் ஆவார்கள். அவர்கள் எந்த ஒரு காலகட்டத் திலும் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அரசியலில் தலையிடுவதில்லை, ஆனால் அதன் தீவிர உறுப்பினர் கள் பிரதமராகவும், கேபினட் அமைச்சர்களாகவும், குடியரசுத் தலைவராகவும் உள்ளனர். அப்படி இருக்க அங்கு ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளே அரசியல் கொள் கைகளாக உருமாறும். இதத்தானே நாம் 2014ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரைப் பார்த்துவருகிறோம். இந்து இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஜாதி எதிர்ப்பு கொள்கை களைக் கொண்டது என்று கூறவே முடியாது, இந்துத்து வாவைப் பிணைக்கும் சங்கிலியே ஜாதிதான், வருண முறைதான்! இந்துத்துவத்தின்படி இந்த சங்கிலி அறுந் தாலோ, படிகளைத் தகர்த்துவிட்டாலோ இந்துத்துவம் முற்றிலும் சிதைந்துபோகும். அப்படி சிதைந்துபோனால் ஆர்.எஸ்.எஸ். என்ற ஒரு அமைப்பே அழிந்துபோகும். ஆகவே ஆர்.எஸ்.எஸ். என்றுமே ஜாதியை ஒழிக்க முன் வராது. அது ஜாதியினர் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று மேம்போக்காகக் கூறுமே ஒழிய அங்கு ஜாதி ஒழியவேண்டும் என்ற முழக்கம் எழும்பாது. இப்போது தாய்மதம் திரும்பும் நிகழ்வுகள் சில நடந்து முடிந்துள்ளன. அப்படி தாய்மதம் திரும்பியவர்களை எந்த ஜாதியில் சேர்ப்பீர்கள் என்று ஆர்.எஸ்.எஸ். செய்தி தொடர்பாளர் பையா ஜோஷியிடம் கேட்டபோது அவர் தந்திரமாக ஒரு கருத்தைக் கூறினார். அவர்கள் முதலில் இந்து மதத்தை முழுமையாக ஏற்றுக்கொண்ட பிறகு அவர் களை எந்த ஜாதியில் சேர்ப்பது என்பதை மதசூத்திரங் களே கூறியுள்ளன என்று கூறியிருந்தார். ஆங்கிலேயர் வருகைக்கு சிறிது முன்பாக அதாவது 14ஆம் நூற்றாண் டில் இந்துமத சீர்திருத்தம் என்ற பெயரில் சில மாற்றங்கள் செய்தனர். அதாவது இனிமேல் பார்ப்பனர், சத்திரியர், வைசியர் யாருமில்லை, பார்ப்பனர் - சூத்திரர் மட்டுமே என்று கூறினார்கள். இதற்கு ஆதாரமாக சில உபநிடதங் களைக் கூறினார்கள். அதாவது கலிகாலத்தில் பிராமணர் களுக்கு எதிராக கலகங்கள் ஏற்படும். இந்த நிலையில் சத்திரியரும், வைசியரும் தங்கள் தர்மத்தை காக்க தவறிவிடுவார்கள். ஆகவே அவர்களும் சூத்திரர்களே என்று கூறியுள்ளனர். இதை அப்படியே பிடித்துக் கொண்டு பர்ப்பனர்களைத் தவிர அனைவருமே சூத்தி ரர்களே அதாவது புதிதாக இந்துமதத்தில் சேர்பவர்களும் சூத்திரர்களே என்பதை கர்வாபசியில் வந்தவர்களுக்கும் சேர்த்து சொல்லிவிடுகிறார்கள். அதாவது சில தலை முறைக்கு முன்பு பார்ப்பனராக இருந்த ஒருவர் பிற மதத்திற்குச் சென்றுவிட்டு மீண்டும் இந்துமதத்திற்கு திரும்பி வந்தாலும் அவர்கள் சூத்திரர்கள் தான். அவர் களுக்கு சூத்திரர்கள் என்ற உறுப்பினர் அடையாளம்தான் கிடைக்கும் அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அரசிய லில் முழுமையாக தலையிடவில்லை என்று கூறமுடி யாது, ஓர் ஆண்டில் காலாண்டு நிதிக்குழு கூடுவது போன்று அனைத்து கேபினட் அமைச்சர்களும், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தைச் சந்தித்து ரிப்போர்ட் கார்டு கொடுக்கிறார்கள். மோகன் பாகவத்தும் அவ்வப்போது பொதுக்கூட்டங்களில் அரசின் செயல் பாடுகள் குறித்து ஆலோசனைகள் சொல்லிவருகிறார். இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். அரசின் நடவடிக்கைகளில் நேரடியாகத் தலையிடுகிறது என்று முடிவு செய்யலாம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு மோடி ஒரு கருவி மட்டுமே, அந்தக்கருவி பழுதானால் வேறு ஒரு புதிய கருவியை கையிலெடுப்பார்கள். இதற்கு பெரிய எடுத்துக் காட்டாக மீண்டும் அத்வானியைக் கூறலாம். ஆர்.எஸ்.எஸ். கொள்கையைத் திணிக்க அரசியல்பலம், ஆட்சி அதிகாரம் பெறவேண்டும், அரசியல் பலம் பெறுவதற்கு கட்சியை வளர்க்கவேண்டும், அதை அத்வானி செம்மை யாக செய்தார். இந்த நிலையில் அவருக்கு ஒருமுறை ஆட்சி அதிகாரம் வந்தது, ஆனால் அவர் தனக்குக் கொடுத்தப் பணியை செவ்வனே செய்ய தவறிவிட்டார். ஆகையால் ஆர்.எஸ்.எஸ். அவரை தூக்கியடித்து விட்டது, இதுதான் உண்மையும் கூட. இந்த நிலையில் குஜராத்தில் இருந்த மோடியை ஆர்.எஸ்.எஸ் தலைமை தேர்ந்தெடுத்தது. அவரும் ஆர்.எஸ்.எஸ். தலைவரின் எண்ணத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்றார் போல் நடந்துகொண்டார். அதற்குப் பரிசாக அவரை குஜராத்தில் இருந்து டில்லிக்குக் கொண்டு சென்று விட்டனர். பாஜக மட்டுமே ஆர்.எஸ்.எஸ். ஆதரவு கட்சி என்று கூறமுடியாது. பிரதான எதிர்கட்சியாக விளங்கும் காங்கிரசில் கூட சிலர் தீவிர ஆர்.எஸ்.எஸ்.காரர்களாக உள்ளனர். ஆனால் அவர்கள் தற்போது அமைதி காத்து வருகின்றனர். ஒருவேளை காங்கிரசு முழு பலத்துடன் ஆட்சி அதிகாரத்தில் அமரும் போது அவர்கள் தங்க ளின் பலத்தைக் காட்டி ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளைத் திணிப்பார்கள். இதை நாம் முந்தைய ஆட்சிகாலங்களில் பார்த்தோம். எடுத்துக்காட்டாக காங்கிரசில் நேரு குடும்பத்தினரல்லாத நரசிம்மராவ் பிரதமரான பிறகு அவரது ஆட்சிகாலத்தில் முழுமையான ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளே நடைமுறைப்படுத்தப்பட்டன. இப்போதுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தும் பாஜகவினரை மட்டுமே நம்பி இருக்க வில்லை. காங்கிரசிலும் தனது ஆதரவாளர்களை நிலை நிறுத்தி வருகிறார். அவர்களுடனான உறவை அவ்வப் போது புதுப்பித்துக்கொண்டு வருகிறார். இதற்கு எடுத்துக் காட்டாக அவ்வப்போது மோடிக்கு எதிரான மோகன் பாகவத்தின் சில உரைகளையே நாம் கூறலாம். முக்கிய மாக மோடி ஆட்சி தொழிலதிபர்களின் ஆட்சி என்று எதிர்க்கட்சிகள் கூறுவதை நான் மறுதலிக்க முடியாது என்று பாட்னாவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார். இதிலிருந்து மோடியை ஆர்.எஸ்.எஸ். முழுமையாக நம்பி இருக்கவில்லை என்பதை தெளிவாக கூறிவிட்டார். தற்போதுள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு இந்துக் கள் அதிகமாக எந்தெந்த நாடுகளில் வாழ்கிறார்களோ அங்கு தங்களை வலுப்படுத்திக்கொள்ளும் வேலையில் இறங்கியுள்ளனர். 2015ஆம் ஆண்டு மோடி லண்டன் சென்ற போது அங்கு இருந்த இந்து அமைப்புகள் இணைந்து மடிசன் மைதானத்தில் பெரும் திரள் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து அதில் 10000-த்திற்கும் மேற் பட்டோரை கலந்துகொள்ளவைத்தது, இதன் மூலம் இந் தியாவில் ஒரு சமிக்கையைக் கொடுத்துள்ளது, அதாவது நாங்கள் அயல்நாடுகளிலும் பலம்பெற்று வருகிறோம் என்று கூற ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் அயல்நாட் டில் வாழும் இந்தியர்கள் எந்த அளவிற்கு ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை ஏற்றுகொள்வார்கள் என்பதில் பெரும் அய்யப்பாடு உள்ளது. அங்கு வீட்டில் மட்டுமே ஜாதியக் கட்டமைப்பைக் காட்ட முடி யும். அதுமட்டுமல்லாமல் பல நாடுகளில் பாகு பாடு என்பது மிகவும் கடுமையான சட்டச்சிக் கல்களை உருவாக்கிவிடும். அது அங்கு குடி யிருக்கும் இந்துமதத்தினர் அனைவருக்குமே ஆபத்தாக முடிந்துவிடும். எப்படியோ ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தற்போது இறுதிக் கட்டத்தில் சுடர் விட்டு எரியும் விளக்கு போன்ற ஒரு நிலைக்கு வந்து விட்டது, இத்தனை ஆண்டுகளாக இல்லாது வலதுசாரி அமைப்பிற்கு முழு ஆட்சி அதிகார பலத்தைக் கொடுத்தார்கள். ஆனால் இவர்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததில் இருந்து மக்கள் அன்றாட வாழ்க்கையே ஒரு பெரும் போராட்ட மாக மாறிவிட்டது. ஒரு புறம் மதவாத சிந்த னைகள் பெருகிக்கொண்டு இருக்கும் அதே வேளையில் மறுபுறம் பொருளாதாரச் சீர்கேடுகள் என மக்களை பெரும் பாடுபடுத்திவிட்டார்கள். 2017க்கு ஆண்டிற்குப் பிறகு கேபினட் அமைச் சர்கள் மக்களைச் சந்திப்பதைதே தவிர்த்து வருகின் றனர். இறுதியாக சென்னையில் நடந்த மோடிக்கு எதிரான கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் என்பது இந்த ஆட்சியில் மக்களின் மீதான வெறுப்பின் வெளிப்பாடு என்பதை எடுத்துக்காட்டிவிட்டது. இந்த நிலைதான் இந்தியா முழுவதும் உள்ளது. ஆனால் ஊடகங்கள் இதை மறைத்து வருகிறது. எடுத்துக்காட்டாக சத்தீஸ் கரில் நடந்த ஒரு மக்கள் நல நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற அம்மாநில முதல்வர் மீது பொது மக்கள் செருப்பு மழையே பொழிந்துள்ளனர். பாது காப்புப் படைவீரர்களிருந்து ஆயிரக்கணக்கான மக்களின் கோபத்திற்கு ஆளாகி இருந்த முதல்வர் மக்களின் கையில் சிக்கிவிட்டால் அடித்தே கொலை செய்து விடுவார்கள் என்ற நிலையில் அவர் தலை தெறிக்க ஓடும் காட்சிகள் சமூகவலைதளத்தில் வலம் வருகிறது. ஆட்சி அதிகாரம் அவர்கள் கையிலிருந்து சென்றுவிட்டால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு ஒரு பலத்த பின்வாங்கல் ஏற்படும்; அதன் பிறகு அவர்கள் மீண்டும் எழுப்ப பலகாலம் ஆகிவிடும்.
'அவுட்லுக்', 'தி பயோனீர்', 'டெக்கான் கிரானிகிள்' ஏடுகளிலிருந்து...
தமிழில்: சரவணா இராசேந்திரன்