Home » சட்டம் & அரசியல் » திரிபுரா முதல்வரின் மாடுமேய்க்கும் விமர்சனப்பேச்சிற்கும் ஆதரவு கொடுக்கும் நிறுவனத்தலைவர்

திரிபுரா முதல்வரின் மாடுமேய்க்கும் விமர்சனப்பேச்சிற்கும் ஆதரவு கொடுக்கும் நிறுவனத்தலைவர்

திரிபுரா முதல்வரின் இளைஞர்கள் மாடு மேய்க்கலாம், வெற்றிலைக் கடை போடலாம் என்று பேசியிருந்தார்....

👤 Saravana Rajendran4 May 2018 9:42 AM GMT
திரிபுரா முதல்வரின் மாடுமேய்க்கும் விமர்சனப்பேச்சிற்கும் ஆதரவு கொடுக்கும் நிறுவனத்தலைவர்
Share Post

திரிபுரா முதல்வரின் இளைஞர்கள் மாடு மேய்க்கலாம், வெற்றிலைக் கடை போடலாம் என்று பேசியிருந்தார். இந்தப்பேச்சிற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ள போது அமுல் பால்பொருள் உற்பத்தி நிர்வாக இயக்குனர் இது நல்ல யோசனை என்று சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
திரிபுரா முதல்வர் சமீபத்தில் கால்நடை கவுன்சில் நடத்திய கூட்டத்தில் பட்டதாரிகள் அரசு வேலைக்காக எங்களைப் பார்க்க வருவதை விட்டுவிட்டு வெற்றிலைப் பாக்கு கடை போடலாம், மாடு மேய்க்கலாம் அரசு வேலை வேண்டும் என்று கூறாமல் வெற்றிலைப் பாக்குக்கடை அமைத்தால், எளிதாக 5 லட்சம் வரை உங்கள் வங்கி இருப்புத் தொகை உயரும் என்று கூறியிருந்தார்.
மேலும் மாடுமேய்யுங்கள் அதன் மூலம் கிடைக்கும் பால்லிட்டர் ரு. 50 க்கு விற்கப்படுகிறது. மாடுமேய்த்து பால் விற்றால் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டலாம் என்றும் கூறினார். இவரது இந்தப்பேச்சு நாடு முழுவதும் கடுமையான சர்ச்சையைக் கிளம்பியது மாட்டைப் பராமரிப்பது ஒன்றும் கேவலமான தொழில் அல்ல, அதே நேரத்தில் பல துறைகளில் பட்டம் பெற்றவர்களை அந்த அந்த துறையில் முன்னேறவழிகூறாமல் அனைவரையும் மாடுமேய்க்க சொல்கிறார் என பல சமூக ஆர்வலர்கள் கருத்துதெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர் எஸ் சோதி வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில்,'குஜராத்தில் இருந்து திரிபுரா கோடி கணக்கான ரூபாய் செலவில் பால் இறக்குமதி செய்கிறது. ஆனால் முதல்வர் பிப்லப்தேப்- நல்ல ஆலோசனை கூறியுள்ளார். குஜராத்தில் ஆயிரக்கணக்கான பால்பன்னைகள் உள்ளது, அதே போல் திரிபுராவிலும் பால்பண்ணைகள் உருவாகவேண்டும் என்று கூறியிருந்தார்.
பால்பன்னைகள் தற்போது நவீனமயமாக்கப்பட்டுவிட்டது, முன்பு 100 பேர் பணிபுரியும் பால்பன்னைகளில் தற்போது வெறும் 10 நபர்கள் மட்டுமே வேலை செய்கின்றனர். இந்த நிலையில் ஆளும் அரசிற்கு சாதமாக கருத்து கூறினால் ஏதேனும் சலுகை கிடைக்கும் என்ற நினைப்பில் இவர் இது போன்று கருத்தை பதிவு செய்துள்ளார்.
மோடி ஜனவரி மாதம் தனக்குத்தானே நடத்திய ஊடகவியலாளர் பேட்டியில் படித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பவர்கள் எல்லாம் டிவிற்கலாம், பக்கோடா விற்கலாம் என்று பேசியிருந்தார். இதற்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருந்தது, டில்லி, சென்னை, பெங்களூர், அய்தராபாத், கோல்கத்தா, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் பட்டதாரிகள் மோடி பக்கோடா என்று கூறி சாலைகளில் பக்கோடா விற்கு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. மோடியின் இந்தக் கருத்தை பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அனைவரும் சுயதொழில் செய்வது நல்லது தானே அதைத்தானே மோடி குறிப்பிட்டிருக்கிறார். அவர் தலைசிறந்த கருத்தைக் கூறியிருக்கிறார். பட்டதாரிகள் மோடியின் கருத்தை சரியாக உள்வாங்காமல் போராடிவருகின்றனர் என்று கூறியிருந்தார்.