Home » சட்டம் & அரசியல் » தமிழக முதல்வருக்கு நேரமில்லை... குஜராத் முதல்வருக்கு நேரம் மோடியின் இரட்டைவேடம்

தமிழக முதல்வருக்கு நேரமில்லை... குஜராத் முதல்வருக்கு நேரம் மோடியின் இரட்டைவேடம்

காவிரி விவகாரம் பற்றி நேரில் பேச நேரம் கேட்ட தமிழக முதல்வர் பழனிச்சாமிக்கு பிரதமர் மோடி நேரம்...

👤 Saravana Rajendran4 May 2018 9:50 AM GMT
Share Post

காவிரி விவகாரம் பற்றி நேரில் பேச நேரம் கேட்ட தமிழக முதல்வர் பழனிச்சாமிக்கு பிரதமர் மோடி நேரம் வழங்கவில்லை. ஆனால் குஜராத் முதல்வர் சந்திக்க அவர் நேரம் ஒதுக்கி உள்ளார்.
டெல்லியில் அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு நடைபெற்றது இதற்காக எல்லா மாநில முதல்வர்களும் டெல்லி சென்றனர். மோடி தலைமை தாங்கி நடந்து முடிந்த இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார்.
இந்நிலையில் காவிரி பிரச்சனை குறித்து மோடியிடம் விவாதிக்க தமிழக முதல்வர் நேரம் ஒதுக்க கேட்டு இருந்தார். தமிழக முதல்வரை சந்திக்க பிரதமர் மோடி நேரம் ஒதுக்கவில்லை அதே நேரத்தில் ஆனால் குஜராத் முதல்வர் விஜய் ரூபாணியை சந்திக்க மோடி நேரம் ஒதுக்கி சந்தித்து பேசினார். அப்போது குஜராத் மாநில தொழில்துறை தொடர்பாக துறைமுகங்களை தனியாருக்கு வழங்கும் முக்கிய சில பிரச்சனைகள் பற்றி விவாதித்ததாக தெரிகிறது,
காவிரி விவகாரம் போன்ற முக்கியமான பிரச்சனையைப் பற்றி பேசுவதற்கு நேரம் ஒதுக்காத மோடி, தனியார்கையில் துறைமுகங்களை கொடுப்பது குறித்து பேச நேரம் ஒதுக்கி பேசியிருப்பது தமிழகத்தில் உணர்வை மதிக்காத நிலையையே காட்டுகிறது.