Home » சட்டம் & அரசியல் » எல்லை மீறி பொய்களைப் பேசும் மோடி

எல்லை மீறி பொய்களைப் பேசும் மோடி

சித்ரதுர்கா என்ற பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்த மோடி நாட்டின் தாழ்த்தப்பட்ட...

👤 Saravana Rajendran8 May 2018 10:21 AM GMT
எல்லை மீறி பொய்களைப் பேசும் மோடி
Share Post

சித்ரதுர்கா என்ற பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்த மோடி நாட்டின் தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்தவரான ராம்நாத் கோவிந்தை நாங்கள் குடியரசுத்தலைவராக்கினோம், அதே போல் எங்கள் கட்சி ஆட்சியில் இருந்த போது வாஜ்பாய் தலைமையில் இருந்த அரசுதான் பாரத ரத்னா விருதுவழங்கி அழகு பார்த்தது ஆனால் இந்த காங்கிரஸ் கட்சி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்றுமே விரோதமாக இருந்தது என்று முழங்கினார்.
ஆனால் உண்மையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போதுதான் கேரளாவைச்சேர்ந்த முதல் தாழ்த்தப்பட்ட குடியரசுத்தலைவர் கே.ஆர். நாராயணன் பதவியேற்றார். அதே போல் 1990-ஆம் ஆண்டு சந்திரசேகர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு ஆட்சியில் இருந்த போது அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருதுவழங்கப்பட்டது.
வாய்பாய் ஆட்சிகாலம் 1998 முதல் 2004வரை தான் இருந்தது.
மேலும் கல்புர்கி என்ற இடத்தில் பேசிய மோடி "தேசிய தலைவர்கள், மற்றும் சரித்திரத்தை மறந்து விட்டு காங்கிரஸ் பேசி வருகிறது. கடந்த 1949 ஆம் ஆண்டு பாகிஸ்தான் யுத்தத்தில் பெரும் பணி ஆற்றிய ராணுவ தலைமை அதிகாரி திம்மையாவை அப்போதைய பிரதமர் நேருவும் பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ண மேனனும் மதிக்கவில்லை. அதனால் அவர் பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல் அவர்கள் ஜெனரல் கரியப்பாவையும் மதிக்கவில்லை" என பேசி உள்ளார்.
ஜெனரல் திம்மையா 1957ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதி ராணுவ தலைமை அதிகாரி பொறுப்பேற்றார், 1947ல் அல்ல. கிருஷ்ண மேனன் 1947-52 இந்திய தூதராக பிரிட்டனில் பணி ஆற்றினார். நீங்கள் தெரிவித்தது போல் அப்போது அவர் பாதுகாப்பு அமைச்சர் இல்லை, மேலும் கரியாப்பா தன்னுடைய இறுதி நாள் வரை மதச்சார்பின்மைதான் இந்தியாவின் முதுகெலுக்கு என்று கூறிவந்தார். அவரைப் பற்றி பாஜகவும் மோடியும் பேசுவது பொருத்தமாக இருக்காது.
இவரது பிரச்சார மேடைகள் அனைத்துமே பொய்களில் சங்கமமாக உள்ளது, 2014நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி இன்றுவரை தன்னுடைய பதவிக்கு ஒரு மரியாதை தரும் வகையில் நடந்துகொள்ளாமல் எதிர்காலத்தில் இந்தியாவின் கோயபல்ஸ் எனப் பெயர் எடுக்கும் முடிவில் பொய்களைப் பேசிவருகிறார்