Home » சட்டம் & அரசியல் » ரஜினியும், மோடியும் சேர்ந்தால் தமிழகத்தில் வெற்றிடம் நிரம்பும்: குருமூர்த்தி நம்பிக்கை

ரஜினியும், மோடியும் சேர்ந்தால் தமிழகத்தில் வெற்றிடம் நிரம்பும்: குருமூர்த்தி நம்பிக்கை

தமிழக அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என்று துக்ளக் இதழின்...

👤 Saravana Rajendran9 May 2018 4:27 PM GMT
ரஜினியும், மோடியும் சேர்ந்தால் தமிழகத்தில் வெற்றிடம் நிரம்பும்: குருமூர்த்தி நம்பிக்கை
Share Post

தமிழக அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என்று துக்ளக் இதழின் ஆசிரியர் குரூமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்திய தொழில்துறை மற்றும் வர்த்தக சம்ளேனத்தின் (FICCI) தேசியளவிலான செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பங்கேற்று உரையாற்றினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மோடியின் ஆட்சி திறமையும், ரஜினியின் மக்கள் ஆதரவும் ஒன்றிணைந்து தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர், தமிழக அரசியலில் காணப்படும் வெற்றிடத்தை ரஜினியால் நிரப்ப முடியும். தமிழகத்தில் எந்த கட்சியும் தேர்தலை சந்திக்கும் நிலையில் இல்லை. தமிழக மக்கள் நல்லவர்கள், அரசியல்வாதிகள் தான் பிரச்னை செய்து வருகிறார்கள் என்று கூறினார்.