மலேசியாவின் பிரதான எதிர்கட்சியான பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி, ஆட்சியமைக்கத் தேவையான 112 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது, இதனை அடுத்து அதன் தலைவராக டாக்டர் மகாதீர் முகமது புதிய அரசை அமைக்கவிருக்கிறார்.
தற்போது ஆட்சியில் இருக்கும் தேசிய முன்னணி மலேசியாவில் நடந்துமுடிந்த தேர்தலில் கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளது.
தற்போது ஆளும் தேசிய முன்னணி தேர்தல் முடிவுகளை வெளியிடாமல் தேர்தல் ஆணையத்தில் தலையிட்டு வருவதாக டாக்டர் மகாதீர் குற்றஞ்சாட்டினார்.
மேலும் அவர் கூறியதாவது தங்களது பக்காட்டன் ஹராப்பான் கட்சி பினாங்கு, சிலாங்கூர் உள்ளிட்ட ஆறு மாநிலங்களைப் கைப்பற்றி விட்டதாக கூறிய அவர் அரசாங்கத்தை அமைக்க தயாராக இருப்பதாகவும், தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்துவ அறிவிப்புக்காகக் காத்திருப்பதாகவும் டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார்.