Home » சட்டம் & அரசியல் » பள்ளிகள் யோகா மய்யங்களாக மாற்றம் உடற்பயிற்சி நிலையங்கள் ஆர்.எஸ்.எஸ் கிளையாக மாற்றம் அரியானா அரசின் பாசிச நடவடிக்கை

பள்ளிகள் யோகா மய்யங்களாக மாற்றம் உடற்பயிற்சி நிலையங்கள் ஆர்.எஸ்.எஸ் கிளையாக மாற்றம் அரியானா அரசின் பாசிச நடவடிக்கை

அரியானாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 2 ஏக்கர் நிலப்பரப்பில் உடற்பயிற்சி நிலையம் அமைக்கும்...

👤 Saravana Rajendran12 May 2018 4:20 PM GMT
பள்ளிகள் யோகா மய்யங்களாக மாற்றம் உடற்பயிற்சி நிலையங்கள் ஆர்.எஸ்.எஸ் கிளையாக மாற்றம் அரியானா அரசின் பாசிச நடவடிக்கை
Share Post

அரியானாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 2 ஏக்கர் நிலப்பரப்பில் உடற்பயிற்சி நிலையம் அமைக்கும் திட்டத்தை அரியானா அரசு செயல்படுத்தி வருகிறது. தற்போது இந்த உடற்பயிற்சி நிலையங்கள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் கிளையாக மாற்றம் செய்ய அரியானா அரசு உத்தரவிட்டுள்ளது.
தீவிர ஆர்.எஸ்.எஸ் செயல்பாட்டாளரும் பாஜக தலைவருமான மனோகர் லால் கட்டார் தலைமையில் அரியானாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது, இவர் ஆட்சிக்கு வந்த பிறகு சிறுபான்மையினருக்கு கிடைத்தவந்த சலுகைகள் அனைத்தையும் நிறுத்தினார். மேலும் அரசு நடத்தும் பள்ளிகளில் உருது ஆசிரியர்களுக்கு சமஸ்கிருதம் கற்றுத்தரப்பட்டு அவர்கள் சமஸ்கிருத ஆசிரியர்களாக மாற்றினர்.
இந்த நிலையில் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகள் அனைத்தும் யோகா பயிற்சி மையங்களாக மாற்றப்பட்டதுதன், காலையில் மதம் தொடர்பான வழிபாடுகள் நடத்தவும் அனுமதியளித்தது, இந்த நிலையில் யோகா சாமியார் ராம்தேவின் பதாஞ்சலி நிறுவனத்திற்கு அனைத்து பள்ளிகளின் யோகா மய்யங்கள் ஒப்பந்தம் அடிப்படையில் கொடுக்கப்பட்டது, மேலும் அரியானா மாநில அரசு சுமார் 50 கோடி வரை இதற்கான ராம்தேவிற்கு வழங்கியுள்ளது.
இந்த நிலையில் மல்யுத்தம், வாலிபால், கபடி உள்ளிட்ட விளையாட்டுக்களுக்கு பயிற்சி வழங்கும் உடற்பயிற்சி மய்யங்கள். மாநில அரசின் நிதியுதவியுடன் அரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமத்திலும் செயல்படுத்தப்படுகிறது. சுமார் 3000 உடற்பயிர்சி மய்யங்கள் என்று திட்டமிட்டு இதுவரை 300 மய்யங்கள் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரியானா மாநிலம் பஞ்சகுலா என்ற ஊருக்கு வெளியில் உள்ள ஒரு உடற்பயிற்சி மய்யத்தின் திறப்பு விழா நடந்தது. இதில் மாநில வேளாண் துறை அமைச்சர் ஓம் பிரகாஷ் தன்கார் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், "மாநிலம் முழுவது திறக்கப்பட உள்ள உடற்பயிற்சி நிலையங்கள் ஆர்எஸ்எஸ்.கிளைகளாக செயல்படும்'' என்றார். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும், கலாச்சரத்தைப் போதிக்கும் வகையில் இந்த கிளைகள் செயல்படும் என்றும் அரசின் முழு ஆதரவு இதன் மூலம் கிடைக்கும் என்றும் கூறினார். மேலும் அம்மாநில கல்வி துறை அமைச்சர் ராம் பிலாஸ் சர்மா கூறுகையில், "உடற்பயிற்சி நிலையங்கள் ஆர்எஸ்எஸ்.ன் பிரிவாக செயல்படுவதில் தவறு ஏதுமில்லை, இதனால் இந்துக் கலாச்சாரம் பாதுகாக்கப்படும்" என்றார்.
அமைச்சர்களில் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
எதிர்கட்சிகளுக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் கரன் தேவ் கம்போஜ் கூறுகையில்,''இந்த உடற்பயிர்சி நிலையங்களில் யார் வேண்டுமானாலும் உடற்பயிற்சி மேற்கொள்ளலாம் அதை நிர்வாகிக்க ஒரு அமைப்பிற்கு நாங்கள் அனுமதிவழங்கியுள்ளோம். அந்த அமைப்பு ஆர்.எஸ்.எஸ்-ஆக இருந்தால் நல்லது தானே என்று கூறினார்.