Home » சட்டம் & அரசியல் » பாஜக சட்டமன்ற உறுப்பினர் பாலியல் வன்கொடுமை செய்தது தடயவியல் ஆய்வுகளின் மூலம் உறுதிசெய்யப்பட்டது

பாஜக சட்டமன்ற உறுப்பினர் பாலியல் வன்கொடுமை செய்தது தடயவியல் ஆய்வுகளின் மூலம் உறுதிசெய்யப்பட்டது

உன்னாவ் தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் தன்னிடம் உதவிகேட்டு வந்த சிறுமியை ...

👤 Saravana Rajendran12 May 2018 4:36 PM GMT
பாஜக சட்டமன்ற உறுப்பினர் பாலியல் வன்கொடுமை செய்தது தடயவியல் ஆய்வுகளின் மூலம் உறுதிசெய்யப்பட்டது
Share Post

உன்னாவ் தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் தன்னிடம் உதவிகேட்டு வந்த சிறுமியை அவரும் அவரது சகோதரரும் மற்றும் உறவினர்கள் கூட்டு பலாத்காரம் செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நீதிமன்ற கண்டிப்பிற்கு பின் உன்னாவ் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் பாலியல்வன்கொடுமை தொடர்பாஜ தடவியல் சான்றுகள் அய்தராபாத் பரிசோதனை சாலைக்கு அனுப்பப்பட்டது, தற்போது அந்த முடிவுகள் சிபிஅய் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது அதில் சிறுமியை பாலியல் செய்தது சட்டமன்ற உறுப்பினர் தான் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் என்பவர் மைனர் பெண் ஒருவரை கூட்டு பலாத்காரம் செய்ததாக புகார் ஒன்று காவல்துறையிடம் தரப்பட்டது. அந்த புகாரின் மேல் நடவடிக்கை எதுவும் காவல்துறை எடுக்கவில்லை. இது குறித்து விசாரணை நடத்தக் கோரி அந்தப் பெண் உத்திரப் பிரதேச முதல்வர் இல்லத்தின் முன்பு தீக்குளிக்க முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார்.
மேலும் அந்தப் பெண்ணின் தந்தை குல்தீப் சிங்கின் சகோதரர் மற்றும் உத்திரப் பிரதேச காவல்துறையினரால் தாக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளார். அதன் பிறகு காவல்துறை விசாரணையை தொடங்கியது. பிறகு சிபிஐக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. குல்தீப் சிங் மற்றும் அவர் சகோதரர் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண் நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார்.
இப்பாலியல் வன்கொடுமை தொடர்பாக உயிரியல் சான்றுகளை ஆய்வு செய்ய அய்தராபாத் பரிசோதனை மய்யத்திற்கு அனுப்பிவைத்தனர். அந்த பரிசோதனையின் முடிவுகள் வெளியாகியுள்ளது, அதில் கொடுக்கப்பட்ட சான்றுகள் மற்றும் குற்றவாளியிடமிருந்து எடுக்கப்பட்ட உயிரியல் மாதிரிகள் ஒன்றாக இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து சிபிஅய் அதிகாரி ஒருவர் கூறும் போது "இந்தச் சான்றுகள் மூலம் குல்தீப் சிங் உள்ளிட்டோர் 16 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்தது உறுதியாகி உள்ளது. மேலும் அச்சிறுமியின் தந்தை காவல்துறை கண்காணிப்பில் இருந்த போது குல்தீப் சிங்கின் சகோதரர் மற்றும் அவர் கூட்டாளிகள் சில காவலர்களால் தாக்கப்பட்டுள்ளார். அதனால் அவர் மரணம் அடைந்துள்ளார். இதுவும் தற்போது நிகழ்விடத்தில் உள்ள கண்காணிப்பு காமிரா மற்றும் சில தனிப்பட்ட நபர்கள் எடுத்த மொபைல் படங்கள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் நீதிமன்றத்தில் நிதிபதிகள் முன்பு ஒப்படைத்துள்ளோம். எனவே சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள் மீது விரைவில் குற்றப் பத்திரிகை அளிக்கப்படும்" என்று கூறினார்