Home » சட்டம் & அரசியல் » தமிழக அமைச்சர் மா.பா. பாண்டியராஜனுக்கு அமெரிக்க பெரியார் அம்பேத்கர் வட்டம் வேண்டுகோள்

தமிழக அமைச்சர் மா.பா. பாண்டியராஜனுக்கு அமெரிக்க பெரியார் அம்பேத்கர் வட்டம் வேண்டுகோள்

நீட் முறைகேட்டை தமிழகத்திற்குள் அனுமதித்த தமிழக தமிழ்வளர்ச்சித் துறை மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜனுக்கு அமெரிக்க பெரியார்-அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

👤 Saravana Rajendran12 May 2018 5:01 PM GMT
தமிழக அமைச்சர் மா.பா. பாண்டியராஜனுக்கு அமெரிக்க பெரியார் அம்பேத்கர் வட்டம் வேண்டுகோள்
Share Post

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நம் தமிழ்ச்சமூகத்தில் அனைத்து வாய்ப்புகளும் வசதிகளும் மறுக்கப்பட்டு, சிறிய கிராமங்களில் ஏழை, நடுத்தர, விவசாய குடும்பங்களில் மகனாக - மகளாக பிறந்த முதல் தலைமுறைக் குழந்தைகள் இந்த சமூகத்தில் வளர்ந்து, பொதுமைய நீரோட்டத்தில் கலப்பதற்கான ஒரே நம்பிக்கையாக இருப்பது கல்வி மட்டுமே. அந்த நம்பிக்கையையும் சிதைப்பதற்காக, இடஒதுக்கீட்டை ஒழிப்பதற்கு கொண்டு வரப்பட்ட கொடிய திட்டமே 'நீட்' இந்த கொடிய திட்டத்தை தமிழ்நாட்டில் அனு மதித்து, அமல்படுத்திய அன்றைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு மா.பா. பாண்டியராசன் அவர்களை இந்த ஆண்டு டாலாசில் நடைபெறவிருக்கும் 31 ஆவது பேரவை தமிழ் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அழைத்திருப்பதை சமூக வலைதளங்களின் வாயிலாக அறிந்து அதிர்ச்சியுற்றோம்.
1176 மதிப்பெண்கள் பெற்று, மருத்துவ இடத்திற்கான தரவரிசையில் 196.5 கட் ஆஃப் மார்க் பெற்றும், நீட் தேர்வின் கொடுமையினால் தன் மருத்துவக்கனவு தகர்ந்து போனதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதையும், அதன் தொடர்ச்சியாக உலகம் முழுக்க நடைபெற்ற போராட்டங்களையும் நாம் நன்கு அறிவோம்.
புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வசித் தாலும், தமிழ் நாட்டின் அனைத்துப் பிரச் சினைகளுக்கும் தங்களது ஆதரவையும், அதற்கான முன்னெடுப்பையும் அமெரிக்கத் தமிழர்கள் செய்துகொண்டே வருகின்றனர். ஈழம், ஜல்லிக்கட்டுப் போராட்டங்களைப் போல அனிதாவின் மரணமும் அமெரிக்கத் தமிழர்களைப் பெருந்துயரில் ஆழ்த்தியது. இதன் விளைவாக அமெரிக்கத் தமிழர்கள் தன்னிச்சையாக ஒன்றிணைந்து நாற்பதுக் கும் மேற்பட்ட நகரங்களில் நினைவேந்தல் கூட்டமும், கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியதோடு, இந்தியத் தூதரகம் முன்பும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதுமட்டுமில் லாமல் அய்.நா கூட்டத்திற்கு வருகைபுரிந்த மத்திய அமைச்சர் திருமதி. சுஷ்மா சுவ ராஜைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்குப் பெற்று, தமிழ் நாட்டு மாணாக்கர்களின் எதிர்காலத்தைப் பாது காப்பதற்காக கடந்த ஆண்டு முதல் உலகம் முழுக்கவுள்ள தமிழ் அமைப்புகள் தொடர்ந்து போராடிவரும் சூழலில், நீட் தேர்வை அனுமதித்த அமைச்சரைத் தமிழ் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அழைத்திருப்பது உலகம் முழுக்க பரவியிருக்கும் தமிழர்களின் மனதைப் புண்படுத்துவதோடு தொடர்ந்து நடை பெற்றுவரும் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்யவும் வாய்ப்புள்ளதாக அச்சமுறுகிறோம். இது நம் தமிழ் இனத்திற்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகமாகும்.
இதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டு தமிழ்நாட்டு மாணவர்களைத் தேர்வெழுத பிற மாநிலங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டது குறித்த ஊடக சந்திப்பில் "எர்ணாகுளம் என்ன அமெரிக்காவிலா இருக்கு? அதான் ஆயிரம் ரூபாய் கொடுத்தோம்ல" என்ற அமைச்சரின் ஏளனப் பேச்சு ஒட்டுமொத்த தமிழர்களின் மனதில் மிகப்பெரிய கொந் தளிப்பை ஏற்படுத்தியுள்ளதையும் பேரவை கவனத்திற்குக் கொண்டுவர விரும்பு கிறோம். இந்த சூழலில் அமைச்சர் மா.பா அவர்களை அழைத்து சிறப்பு செய்தால் அது அமெரிக்கத் தமிழர்களுக்கு மிகப் பெரிய இழுக்காக அமைவதோடு ஓர் வரலாற்றுப் பிழையாகவும் நம் வரலாற்று பக்கங்களில் பதிவுசெய்யப்படும்.
காவிரி , ஸ்டெர்லைட் , நீட் போன்ற திட்டங்களின்மூலம் தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கும் இந்தியப் பிரத மரின் தமிழ் நாடு வருகையை கண்டித்து கருப்பு கொடி, பலூன் பறக்கவிட்டதோடு "Go Back மோடி" என்று சமூகவலைத் தளங் களில் ட்ரெண்ட் செய்து நடத்தி, உலகத்தின் கவனத்தை நம் தமிழர்கள் ஈர்த்தனர், இதனைத் தொடர்ந்து லண்டனிலும் இதே போன்று போராட்டம் இந்திய பிரதமர் மோடிக்கு எதிராக நடைபெற்றது. இதே போன்று, அமைச்சர் மா.பா அமெரிக்கா வரும்பட்சத்தில், அதை எதிர்த்துக் கண்ட னப் போராட்டங்களும், கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டங் களும் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளதை எண்ணிக் கவலை கொள்கிறோம்.
முப்பது ஆண்டுகளாக தமிழ் மொழி , பண்பாடு, கலை ஆகியவற்றை முன்னெ டுத்துச்செல்லும் பேரவையின் தமிழ் விழா, இந்த ஆண்டும் அமைதியாகவும் சிறப் பாகவும் நடைபெறவேண்டும் என்று விரும்புவதோடு, அதற்கான அனைத்துப் பணிகளையும் பேரவையுடன் இணைந்து முன்னெடுக்க ஆயத்தமாகவுள்ளோம்.
அமைச்சர் மா.பா பாண்டியராசன் அவர்களின் வருகையைப் பெரும்பான் மையான அமெரிக்கத் தமிழர்கள் விரும்ப வில்லை. நம் தமிழ் உறவுகளின் விருப் பத்திற்கு மதிப்பளித்து அமைச்சரின் அழைப்பைத் திரும்பப்பெற வேண்டு மென்று பேரவையைக் பெரியார் - அம்பேத்கர் படிப்பு வட்டம் - அமெரிக்கா சார்பாக கேட்டுக்கொள்கிறோம். நன்றி.
பெரியார் - அம்பேத்கர் படிப்பு வட்டம், அமெரிக்கா