துாத்துக்குடியில், வேதாந்தா குழுமத்தின், ஸ்டெர்லைட் தாமிர தொழிற்சாலையை மூடும் உத்தரவை, தேசிய பசுமை தீர்ப்பாயம் ரத்து செய்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு ஐகோர்ட் மதுரை கிளை தடை விதித்தது. இதனை எதிர்த்தும், ஆலையை திறக்க அனுமதி வழங்க வேண்டும் எனக்கூறியும் ஸ்டெர்லைட் ஆலை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க ஒப்பு கொண்ட நீதிமன்றம், வரும் 8 ம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் எனக்கூறியுள்ளது.