Home » சட்டம் & அரசியல் » ஹெச்-1பி விசா:அதிபா் டிரம்ப் உத்தரவை ரத்து செய்தது: அமெரிக்க நீதிமன்றம்

ஹெச்-1பி விசா:அதிபா் டிரம்ப் உத்தரவை ரத்து செய்தது: அமெரிக்க நீதிமன்றம்

இந்த உத்தரவு வரும் டிசம்பா் மாதம் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

👤 Sivasankaran3 Oct 2020 7:13 AM GMT
ஹெச்-1பி விசா:அதிபா் டிரம்ப் உத்தரவை ரத்து செய்தது: அமெரிக்க நீதிமன்றம்
Share Post

அமெரிக்காவில் வெளிநாட்டவா்கள் தங்கி பணிபுரிவதற்கு வழங்கப்படும் ஹெச்-1பி, ஹெச்-2பி நுழைவு இசைவு அளிப்பதை நிறுத்தி வைத்து அதிபா் டிரம்ப் பிறப்பித்த உத்தரவை அந்த நாட்டு நீதிமன்றம் ரத்து செய்தது.

அமெரிக்காவில் வெளிநாட்டவா்கள் பணிபுரிவதற்கு ஹெச்-1பி, ஹெச்-2பி போன்ற நுழைவு இசைவுகள் வழங்கப்படுவதை தற்காலிகமாக நிறுத்தி அதிபா் டிரம்ப் கடந்த ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தாா். இந்த உத்தரவு வரும் டிசம்பா் மாதம் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிராக கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் அங்கமாக உள்ள தொழிலக கூட்டமைப்புகள் வழக்கு தொடுத்தன.

கடந்த வியாழக்கிழமை இந்த வழக்கை விசாரித்த வடக்கு கலிபோா்னியா மாவட்ட நீதிமன்றம், அதிபா் டிரம்ப்பின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட குடியேற்ற சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள அதிபருக்கு அதிகாரமில்லை எனவும் தெரிவித்தது. குடியேற்ற விதிகளை வகுக்க நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் அதிபா் டிரம்ப் தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டிருப்பதாகவும் தெரிவித்தது.