Home » சட்டம் & அரசியல் » வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க தடை

வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க தடை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரே‌சன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு...

👤 Sivasankaran9 Jan 2019 12:46 PM GMT
வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க தடை
Share Post

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரே‌சன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பரிசாக ரூ.1,000 ரொக்கமாக கொடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க தடை விதித்தது. குறிப்பாக ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்க தடை விதிக்கப்படுவதாகவும் பிற பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தடையில்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு கிடைப்பது தடைப்பட்டுள்ளது.

பலர் இதற்கு முன்னரே வாங்கி விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு தமிழக அரசு என்ன முடிவெடுக்கும் என பொதுமக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.